சூப்பர் ஹிட் ஆன மிட்சுபிஷியின் ஐ எம்ஐஇவி எலக்ட்ரிக் கார்

ஆனால், எகிறி வரும் பெட்ரோல் விலை உயர்வு எலக்ட்ரிக் கார்கள் பற்றி யோசிக்க வைத்துள்ளது. தவிர, சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கார்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஆனால், இந்தியாவில் ரேவா நிறுவனம் மட்டும் ஒரே ஒரு எலக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு மிட்சுபிஷி நிறுவனம் இந்தியாவில் தனது ஐ எம்ஐஇவி என்ற எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த கார் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
3.3 மீட்டர் நீளமும், 1.4 மீட்டர் அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் குறுகலான சாலைகளிலும் எளிதாக சென்று வரும். 330 வோல்ட் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் 66 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
எனவே, நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹேட்ச்பேக் கார்களுடன் எளிதாக போட்டிபோடும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை செல்லும் இந்த கார் மணிக்கு அதிக பட்சம் 130 கிமீ வேகத்தில் செல்லும் என்பது கூடுதல் சிறப்பு.
சார்ஜ் செய்வதும் மிக எளிது. அதாவது சார்ஜ் போட்டவுடன் 30 நிமிடங்களில் இதன் பேட்டரி 80 சதவீத சார்ஜ் ஆகிவிடும் தொழில்நுட்பம் அசத்துகிறது. பவர் விண்டோஸ், ஏசி, மியூசிக் சிஸ்டம், ஹாலோஜென் ஹெட்லைட் ஆகியவையும் இந்த காரின் பலத்தை கூட்டுகிறது.
பிரேக் பிடிக்கும்போது கிடைக்கும் ஆற்றலை பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பமும் உண்டு. 4 பேர் தாரளமாக அமர்ந்து பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த காம்பெக்ட் எலக்ட்ரிக் கார் ரூ.4 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிக வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








