'புது' கொள்கைகளை பரப்ப இன்னோவாவில் புறப்படும் நாஞ்சில் சம்பத்!

மதிமுக கொள்கையை பரப்பி வந்த நாஞ்சில் சம்பத் தற்போது அதிமுக கொள்கைகளை பரப்புவதற்கு ஆயத்தமாகிவிட்டார். கொள்கை பரப்பு பயணங்கள தங்கு தடையின்றி அமைய அவருக்கு இன்னோவா காரை பரிசாக வழங்கியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அலுங்காமல், குலுங்காமல் செல்லும் கார் என்று பெயர்பெற்ற இன்னோவா எம்பிவி மார்க்கெட்டில் பல நெருக்கடிகளை சமாளித்து விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. நாஞ்சில் சம்பத் பயணங்களுடன் தோள் நிற்கப் போகும் இன்னோவா பற்றிய குட்டி சிறப்பு பார்வை இங்கே.

சாமுத்ரிகா லட்சணம்

சாமுத்ரிகா லட்சணம்

சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய எம்பிவி இன்னோவா என்றால் மிகையாகாது. சிறந்த ஏரோடைனமிக் டிசைனுடன் கொண்ட கார். புதிய இன்னோவாவின் ஹெட்லைட், குரோம் பட்டைகளுடன் கூடிய முன்பக்க கிரில் ஆகியவை வசீகர அழகை தருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது.

எக்கச்சக்க வேரியண்ட்கள்

எக்கச்சக்க வேரியண்ட்கள்

வசதிகளை பொறுத்து மொத்தம் 26 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. டாப் வேரியண்ட்டில் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் இருக்கைகள் ஆகியவை கிடைக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. மேலும், இந்த காரின் மூன்று வரிசைகளும் மிக தாராளமான இடவசதியை கொண்டிருக்கிறது.

 சொகுசு பயணம்

சொகுசு பயணம்

அடிக்கடி நீண்ட தூர பயணங்கள் செல்பவர்களுக்கு இன்னோவா சிறந்த கார். எந்தவொரு சாலைநிலைகளிலும் அதிர்வுகள் இல்லாமல் செல்லும். மேலும், எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 9.0 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 11.4 கிமீ மைலைஜையும் தரும் என டொயோட்டா தெரிவிக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

பேஸ் மாடல் ரூ.9.09 லட்சம் முதல் டாப் என்ட் மாடல் ரூ.13.86 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 14, 2012, 18:03 [IST]
English summary
Nanjil Sampath, the former MDMK leader who has joined the ADMK has been gifted a Toyota Innova by chief minister J Jayalalithaa. The Innova is a perfect car fro long journeys offering good comfort space and ride quality. It is most suitable for Sampath who will campaign for the ADMK.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+