ஓய்வுக்கு பின் நானோவுக்காக முழு மூச்சில் இறங்கும் ரத்தன் டாடா!

டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா வரும் 28ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதன் பின் தனது கனவு காரான நானோவை வெற்றிகரமான மாடலாக மாற்றுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த உள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது," நானோ காரை வெற்றியடைதாதற்கு பல காரணங்கள் உள்ளன. மேற்குவங்கத்திலிருந்து ஆலையை குஜராத்துக்கு மாற்றியது, பிரபலப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்காதது, டீலர் நெட்வொர் உள்ளிட்ட பல விஷயங்கள் நானோ வெற்றியை பாதித்துவிட்டது.
இருப்பினும், நானோவை முழுமையான வெற்றி காராக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். மேலும், நானோ மார்க்கெட்டுக்கு வந்து 4 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், பழைய மாடலாகிவிட்டது. எனவே, நானோவுக்கு புதுப்பொலிவு கொடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்ற செய்தியையும் அவர் மறுத்தார். நம் நாட்டில் விதிக்கப்படும் சில 'சில்லி'யான வரிகளால் காரை அசெம்பிள் செய்வதைவிட, அதனை முழுமையாக உற்பத்தி செய்யும்போது அதிக செலவாகிறது.
எனவே, இந்தியாவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் தயாரிக்கப்படுவதற்கான திட்டம் தற்போதைக்கு இல்லை," என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








