அதிர்ஷ்ட குலுக்கலில் எட்டியோஸ் கார் வென்ற நடிகை நவ்யா நாயர்!
'யுஏஇ எக்ஸ்சேஞ்ச்' நிறுவனம் நடத்திய அதிர்ஷ்ட குலுக்கலில் டொயோட்டா எட்டியோஸ் காரை பரிசாக வென்றுள்ளார் நடிகை நவ்யா நாயர். கடந்த ஆகஸ்ட் 1ந் தேதி முதல் அக்டோபர் 31ந் தேதி வரை வெளிநாட்டிலிருந்து பணபரிமாற்றம், விமான டிக்கெட் முன்பதிவு, மோட்டார் இன்ஸ்யூரன்ஸ், வாகன கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு போட்டியை யுஏஇ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் அறிவித்திருந்தது.
இப்போட்டியில் குலுக்கல் முறையில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்கள் கார்கள், எல்சிடி டிவி, தங்க காசுகள் போன்றவற்றை வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. பிரபல நடிகை நவ்யாவும் யுஏஇ மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த குலுக்கலில் நவ்யா நாயருக்கு டொயோட்டா எட்டியோஸ் கார் பரிசாக கிடைத்துள்ளது. கொச்சியில் நடந்த விழாவில் யுஏஇ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் அதிகாரி ஜார்ஜ் அந்தோணி காரின் சாவியை நடிகை நவ்யா நாயரிடம் வழங்கினார்.

தமிழ் பிரவேசம்
மலையாள திரை உலகிலிருந்து அழகிய தீயே மூலம் தமிழுக்கு வந்த நவ்யா சிதம்பரத்தில் அப்பாசாமி, மாயக்கண்ணாடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

டொயோட்டா எட்டியோஸ்
2010ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 30,000 எட்டியோஸ் கார்களை டொயோட்டா விற்பனை செய்தது. டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் என்ட்ரி லெவல் செடான் கார்.

எஞ்சின்
89 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 67 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது.

மைலேஜ்
அராய் சான்றுபடி பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.59 கிமீ மைலேஜையும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
எட்டியோஸ் 6 வண்ணங்களில் கிடைக்கிறது. 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்
டூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வேரியண்ட்களும் கிடைக்கிறது.

வேரியண்ட்கள்
பெட்ரோல் மாடல் 5 வேரியண்ட்களிலும், டீசல் மாடல் 4 மாடல்களிலும் கிடைக்கிறது. ரூ.5.40 லட்சம் முதல் ரூ.8.31லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ப்ளஸ்
டொயோட்டா பிராண்ட் பெயர், தரமான கட்டமைப்பு, 13 லிட்டர் கூல்டு கிளவ் பாக்ஸ்

மைனஸ்
புதிய டிசைன் அம்சங்கள் இல்லை, பேஸ் வேரியண்ட்களில் பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், ரிமோட் லாக் போன்ற வசதிகள் இல்லை.


Click it and Unblock the Notifications








