புதிய செவர்லே கேப்டிவா எஸ்யூவி: படங்களுடன் ஒரு பார்வை
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய செவர்லே கேப்டிவா பிரிமியம் எஸ்யூவியை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூனில் விற்பனைக்கு கொண்டு வந்தது. வெளிப்புறம் மற்றும் ஏராளமான மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய கேப்டிவா வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்களை நிறைவாகவே கொண்டிருக்கிறது.
புதிய முன்பக்க கிரில், கிளியர் லென்ஸ் புரொஜெக்டர் ஹெட்லைட், புதிய ஏர்டேம் டிசைன் ஆகியவை முகப்பின் கம்பீரத்தை கூட்டுகின்றன. புதிய கேப்டிவா எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இன்னும் பிற முக்கிய அம்சங்கள், வசதிகள் ஸ்லைடரில் காணலாம்.
மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது. இந்த காரின் பூட் ரூம் 1565 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மார்க்கெட்டில் 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கு செவர்லே கேப்டிவா நேரடி போட்டியாளராக விளங்குகிறது.
டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்:
கேப்டிவா எல்டி : ரூ.18,74,062
கேப்டிவா எக்ஸ்டீரிம் : ரூ.19,48,347
கேப்டிவா எல்டிஇசட் : ரூ.20,59,139
(ஆல்வீல் டிரைவ்)

வடிவமைப்பு
*புதிய வடிவமைப்பு கொண்ட முன்பக்க கிரில்
*புதிய ஹெட்லைட் மற்றும் டேஞ்சர் லைட்டுகள்
*ரியர் வியூ மிரர் பின்புறம் எல்இடி இன்டிகேட்டர் லைட்
*17 இஞ்ச் அலாய் வீல்கள்

எஞ்சின்
*2.2 லிட்டர் டீசல் எஞ்சின்
*அதிகபட்சம் 150 பிஎஸ் பவர்
*320என்எம் டார்க்

எக்ஸ்டீரிம் வேரியண்ட்
*எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் மூலம் திறந்து மூடும் கண்ணாடி கூரை
*புளுடூத் வசதியுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
*ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள்

இருக்கை வசதி
*உயர்தர லெதர் இருக்கைகள்
*கடைசி வரிசை இருக்கையை மடக்கிக்கொள்ளும் வசதி
*கருப்பு, சிவப்பு கலரில் டூவல் டோன் இருக்கைகள்
*ஆட்டோமேட்டிக் வைப்பர்கள்

முக்கிய அம்சங்கள், வசதிகள்
*குரூஸ் கன்ட்ரோல்
*ஹில் அசிஸ்ட் சிஸ்டம்
*4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல்
*எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்
*குரோம் பூச்சுடன் கவர்ச்சியான சென்ட்ரல் கன்சோல்
*தரமான பிளாஸ்டிங் பினிஷிங்
*மெருகூட்டப்பட்ட புதிய டேஷ்போர்டு
*ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

பாதுகாப்பு அம்சங்கள்
*ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்
*ஆல்வீல் சிஸ்டம்
*இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்
*6 காற்றுப்பைகள்
*டிராக்ஷன் கன்ட்ரோல்
*முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் பனி விளக்குகள்


Click it and Unblock the Notifications








