ஆல்ட்டோ ஆரவாரம்: முன்பதிவு 17,000ஐ தாண்டியது
பண்டிகை காலத்தில் ஏராளமான கார் மாடல்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி வருகின்றன. இதனால்,சோர்ந்து போய் கிடந்த கார் விற்பனையில் சிறிது சூடுபிடித்துள்ளது. புதிய மாடல்களுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
பண்டிகை காலத்தில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார்களில் ஆல்ட்டோ காருக்கு அதிக முன்பதிவு எண்ணிக்கை கிடைத்துள்ளது. புக்கிங்கில் பட்டையை கிளப்பி வரும் புதிய ஆல்ட்டோ நிச்சயம் மாருதியின் விற்பனைக்கு பூஸ்ட் கொடுக்கும் என நம்பலாம்.

மாருதியின் புதிய ஆல்ட்டோ 800
குறைந்த விலை, நிறைந்த அம்சங்களுடன் வந்துள்ள ஆல்ட்டோவுக்கு இதுவரை 17,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இந்த புக்கிங் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மாருதி நம்புகிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22.74 மைலைஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.46 கிமீ மைலேஜ் தருவதாக மாருதி தெரிவித்துள்ளது.

மஹிந்திரா குவான்ட்டோ
மஹிந்திரா குவான்ட்டோவுக்கு இதுவரை 6,200 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 7 பேர் செல்லும் வசதி, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை குவான்ட்டோவின் கூடுதல் அம்சங்களாக வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர்.

ஹூண்டாய் நியோ எலன்ட்ரா
புளூயிடிக் டிசைனில் வந்திருக்கும் புதிய எலன்ட்ரா கார் ஹூண்டாய்க்கு டீசன்ட்டான விற்பனையை பெற்ற தந்துள்ளது. ஆகஸ்ட், செப்டம்பரில் 1,384 எலன்ட்ரா கார்கள் விற்பனையாகியுள்ளது. பழைய எலன்ட்ரா விற்பனை நிறுத்தப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக டி செக்மென்ட்டில் ஹூண்டாய்க்கு வெற்றிடமாக கிடந்த இடத்தில் தற்போது பூ மலர செய்துள்ளது புதிய எலன்ட்ரா.

ரெனோ டஸ்ட்டர்
ஜூலையில் அறிமுகமான டஸ்ட்டர் தொடர்ந்து புக்கிங்கில் நாலுகால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 20,000க்கும் அதிகமான புக்கிங் எண்ணிக்கையை பெற்றுள்ளது. தற்போது போட்டியாளர் இல்லாததால் டஸ்ட்டருக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிறது ஆட்டோமொபைல் துறை.


Click it and Unblock the Notifications








