2015 மாடல் புன்ட்டோவை புதிய பெயருடன் களமிறக்கும் ஃபியட்

பான்டோனா என்ற பெயரில் புதிய புன்ட்டோவை ஃபியட் அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போதைய 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.6 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது.
புன்ட்டோவின் தற்போதைய சேஸிஸிலேயே வடிவமைக்கப்பட்டாலும் தோற்றத்தில் முற்றிலும் புதியதாக இருக்கும் பான்ட்டோனா. நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அம்சங்களையும் கொண்டிருக்கும்.
பவர்ஃபுல் எஞ்சின், சிறந்த கையாளுமை மற்றும் வசதிகளுடன் வர இருப்பதால் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை புதிய புன்ட்டோ கொடுக்கும் என ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








