2013 ஸ்கோடா ஆக்டாவியா அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு
2013 ஸ்கோடா ஆக்டாவியா எம்கே3 காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய கோல்ஃப், ஆடி ஏ-3, சீட் பிராண்டின் லியோன் ஆகிய கார்கள் வடிவமைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகனின் புதிய எம்க்யூபி பிளாட்பார்மில்தான் இந்த புதிய ஆக்டாவியாவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. புதிய ஆக்டாவியா 8 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும். ஸ்லைடரில் புதிய ஸ்கோடா ஆக்டாவியா எம்கே3 காரின் பிரத்யேக படங்களை காணலாம்.

மூன்றாம் தலைமுறை ஆக்டாவியா
புதிய ஆக்டாவியா மூன்றாம் தலைமுறை காராக வருகிறது.

தாராள இடவசதி
பழைய மாடலைவிட கூடுதல் நீள, அகல, உயரத்துடன் வருவதால் சிறந்த இடவசதியை அளிக்கும்.

பெட்ரோல் எஞ்சின்
120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் எஞ்சின் மற்றும் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் வருகிறது.

டீசல் எஞ்சின்
106 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சினுடன் வருகிறது புதிய ஆக்டாவியா.

அசத்தலான மைலேஜ்
டீசல் மாடல் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என ஸ்கோடா தெரிவித்துள்ளது.

புதுப்பொலிவு
ஸ்கோடாவின் டிசைன் டீம் தலைவர் ஜோஸெப் காபா தலைமையிலான வடிவமைப்பு வல்லுனர்கள் முதல் பார்வையிலேயே வசீகரிக்கும் அளவுக்கு மிக மிக நுணுக்கமாக மாற்றங்களை செய்து மூன்றாம் தலைமுறை ஆக்டாவியாவை நேர்த்தியாக உருவாக்கியிருக்கின்றனர்.

லோகோ இடமாற்றம்
புதிய பாடி லைன் மற்றும் ஸ்கோடாவின் பிராண்டு சின்னமும் இடம் மாறியிருக்கிறது.

பக்கவாட்டு டிசைன் பக்கா..!!
பக்கவாட்டில் பக்காவாக இருக்கிறது புதிய ஆக்டாவியா. கூடுதல் வீல் பேஸ், சி பில்லர் சற்று பின்புறம் இழுக்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

சிறப்பு வசதிகள்
புதிய தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட நேவிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்வைப்பிங் பங்ஷன்ஸ், கான்டன் சவுன்ட் சிஸ்டம் ஆகியவை ஆக்டாவியாவில் புதிது.

புதிய தொழில்நுட்பங்கள்
அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், ஹைபீம் லைட்டை தானியங்கி முறையில் இயக்கும் இன்டலிஜென்ட் லைட் அஸிஸ்டன்ட் ஆகிய தொழில்நுட்பங்களும் ஸ்கோடாவுக்கு புதிதுதான்.


Click it and Unblock the Notifications








