வடிவமைப்பில் மாறுதல்களுடன் புதிய நானோ: டீசல் மாடலிலும் வருகிறது...!

டீம் பிஎச்பி தளத்தின் மேம்படுத்தப்பட்ட நானோ காரின் சோதனை ஓட்டப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், நானோ காரின் பின்புறத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், புதிய டீசல் எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்ட நானோ காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த டீசல் எஞ்சின் சோதனைகளில் லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ தருவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதனால், டீசல் நானோ மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், வடிவமைப்பிலும் நானோ கார் மாறுதல்களை பெற இருப்பதாக வெளியான தகவல் எதிர்ப்பார்ப்பை இன்னும் கூட்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








