2012 டொயோட்டா கேம்ரி சிறப்பம்சங்கள்: ஒரு பார்வை

எஞ்சின்:
புதிய கேம்ரி பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கிறது. 4 சிலின்டர்கள் கொண்ட 2.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 181 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது.
மைலேஜ்:
அராய் சான்றின்படி, புதிய கேம்ரி லிட்டருக்கு 12.98 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2 டன் அளவுக்கு எடையை சுமந்து செல்ல வேண்டிய நிலையில் அந்தளவுக்கு மைலேஜ் தராது. இருப்பினும், லிட்டருக்கு அதிகபட்சம் 10 கிமீ வரை மைலேஜ் தரும் என்று கூறலாம்.
கலர்கள்:
வெள்ளை, சில்வர், கருப்பு, பீயேஜ் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் புதிய கேம்ரி கிடைக்கும். குரோம் ரேடியேட்டர் கிரில், 10 ஸ்போக் அலாய் வீல்கள், குரோம் பூச்சுடன் டோர் ஹேண்டில்கள், ஆகியவை கூடுதல் அம்சங்களாக கூறலாம்.
ஆக்சஸெரீஸ்:
புளூடூத் வசதியுடன் கூடிய டச் ஸ்கிரீன் டிவிடி பிளேயர், இன் பில்ட் மைக் மற்றும் ஆம்பிலிபயர், மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே, எல்இடி பர்சனல் விளக்குகள், முன்புறம், பின்புறம் கப் ஹோல்டர்கள், மூடும் வசதிகொண்ட கிளவ் பாக்ஸ், 12 வி பவர் அவுட்புட் ஆகியவை உள்ளன.
சிறப்பம்சங்கள் லிஸ்ட்:
புதிய ஹெட்லைட்
புதிய கிரில்
புதிய பனி விளக்குகள்
16 இஞ்ச் அலாய் வீல்கள்
ஈக்கோ டிரைவ் இண்டிகேட்டர்
தானியங்கி வைப்பர்
குரூஸ் கன்ட்ரோல்
மல்டி பங்க்ஷனல் ஸ்டீயரிங் வீல்
8 வே அட்ஜெஸ்ட் வசதியுடன் டிரைவர் இருக்கை
தாராளமான இடவசதி
6 ஸ்பீக்களுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
ஏபிஎஸ், இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட்
டிரைவர், பயணிகளுக்கு ஏர்பேக்குகள்
கேபினில் தாராள இடவசதியுடன் வந்திருக்கும் புதிய கேம்ரியின் விற்பனை குறித்து டொயோட்டா நிறுவன அதிகாரிகள் குறிப்பிடுகையில், 40 வயதுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மனதில் கொண்டே புதிய கேம்ரி வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றனர்.


Click it and Unblock the Notifications








