2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நொய்டாவுக்கு மாற்றம்!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில்தான் வழக்கமாக டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடநெருக்கடியால் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. மேலும், பார்வையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னேற்பாடுகள் இல்லை என்றும் புகார் எழுந்தன.
இதையடுத்து, சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவை டெல்லியிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற அமைப்பாளர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில், 2014ம் ஆண்டு நடைபெற இருக்கும் அடுத்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி பிரகதி மைதானத்துக்கு பதிலாக டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் என்று சியாம் தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கமாக ஜனவரியில் நடைபெறும் இந்த கண்காட்சி 2014ம் ஆணடு பிப்ரவரியில் 6ந் தேதி முதல் 12ந் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அரங்கத்தை அமைக்க 40,000 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆட்டோ எக்ஸ்போவில் 50,000 சதுரமீட்டர் இடம் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், வர்த்தக வாகன கண்காட்சி பிப்ரவரி 15 முதல் 18ந் தேதி வரை நடைபெறும் என்றும் சியாம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








