7 சீட்டர் நிசான் எவாலியா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

பண்டிகை காலத்தில் வரிசை கட்ட இருக்கும் மாடல்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படு்த்தியிருக்கும் மாடலான நிசான் எவாலியாவை நேற்று டெஸ்ட் டிரைவ் செய்தோம். பெங்களூரிலிருந்து நந்தி ஹில்ஸ் வரையில் டெஸ்ட் டிரைவ் செய்து நிசான் எவாலியாவின் சாதக பாதகங்களை இங்கே வழங்குகிறோம்.

நிசான் எவாலியா

அதிக உயரமான காராக தோற்றமளிக்கும் எவாலியாவை கார் என்று கூறுவதைவிட மினிவேன் என்று கூறலாம். ஹெட்லைட், கிரில்கள் ஒரே கோட்டில் மாலை தொங்கவிட்டது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது கூடுதல் கவர்ச்சி. பக்கவாட்டில் முன்புற கதவின் வடிவமைப்பு கவர்கிறது.

பின்புறம் கவரும் அம்சங்கள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறது. எவாலியாவில் ஸ்லைடிங் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஏறி, இறங்குவதற்கு எளிதாக இருந்தாலும் பருமனானவர்கள் ஏறும்போது சிறிது இடைஞ்சலாக உணரலாம். உட்புறத்தை பொறுத்தவரை தாராள இடவசதி கொண்ட காராக இருப்பதால் இன்னோவாவின் நேரடி போட்டியாளராக எவாலியா இருக்கும்.

7 பேர் தராளமாக அமர்ந்து செய்யும் வசதி கொண்ட எவாலியாவில் டிரைவர் இருக்கை பொஷிசனை குறிப்பிட்டு கூறலாம். காரின் நாலாபுறமும் தெளிவாக தெரியும் வகையில் இருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் மட்டும் எவாலியா பீயேஜ் இன்டிரியர் கொண்டதாக விற்பனை செய்யப்பட உள்ளது.

பின்புற இருக்கை மடக்கினால் 2 பெரிய சூட்கேஸ்களை வைத்துக் கொள்ளலாம். நடுவரிசை இருக்கையையும் மடக்கினால்... 11 சூட்கேஸ் பெட்டிகளை வைத்துக் கொள்ளும் அளவுக்கு இடவசதி இருக்கிறது.பின்புற கதவுகள் மேல்நோக்கி திறக்கும் வகையில் இருப்பதால் பொருட்களை வைத்து எடுப்பது எளிதாக இருக்கிறது.

மைக்ராவில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டீயரிங் வீல்தான் என்பதால் கைக்கு கச்சிதமாகவும், லாவகமாகவும் இருக்கிறது. சென்ட்ரல் கன்சோல் முடிவில் பொருத்தப்பட்டுள்ள கியர் லிவர் சற்று வித்தியாசம். அனைத்து இருக்கைகளும் அமர்நது செல்வதற்கு சொகுசாகவும், வசதியாகவும் இருக்கிறது. பின்வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கு தனி ஏதி வென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

காரின் அனைத்து இருக்கைகளிலும் அமரும்போது ஹெட்ரூம், லெக்ரூம் சிறப்பாக இருப்பதால் அதிகம் உயரம் கொண்டவர்கள் கூட வசதியாக அமர்ந்து பயணம் செய்யலாம். ஸ்லைடிங் கதவுகளின் கண்ணாடியை கீழே ஏற்றி இறக்க முடியாது. ஆனால், ஒரு பட்டனை அழுத்தினால் பக்கவாட்டில் லேசாக திறந்து வைத்தால் ஓரளவு காற்றோட்டம் கிடைக்கும்.

நடுவரிசை மற்றும் பின்வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கு காற்று அதிகம் செல்லாது என்றாலும், முன்பக்க கதவின் கண்ணாடிகள் விசாலமாக இருப்பதால், ஓரளவு காற்றோட்டத்தை நடுவரிசையில் அமர்ந்திருப்பவர்கள் பெற முடியும்.

மைக்ரா, சன்னி, ரெனோ டஸ்ட்டர், பல்ஸ் ஆகிய கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இன்னோவாவின் போட்டியாளரான இந்த காருக்கு இந்த எஞ்சின் போதுமானதா என்ற கேள்விகள் எழுந்து வந்தன.

ஆனால், இந்த கேள்விகளை டெஸ்ட் டிரைவ் செய்தபோது எவாலியா மறக்க செய்து விட்டது. ஆம், எவாலியாவின் எஞ்சினில் டர்போ லேக் அதிகம் தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல், நெடுஞ்சாலை, மலைச் சாலை என அனைத்திலும் இதன் எஞ்சின் சிறப்பான பெர்ஃபார்மென்சை காட்டுகிறது.

மேலும், இன்னோவாவைவிட எடை குறைந்த கார் என்பதால் மைலேஜிலும் எவாலியா பின்னி எடுக்கும் என்று நம்பலாம். நிசான் கொடுத்த தகவலின்படி, எவாலியா லிட்டருக்கு 19.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவித்துள்ளது. எக்ஸ்இ, எக்ஸ்இ+, எக்ஸ்எல் மற்றும் எக்ஸ்வி ஆகிய 4 வேரியண்களில் விற்பனை செய்யப்பட இருக்கும் எவாலியாவில் ஏபிஎஸ், இபிடி, பிரேக் அசிஸ்ட் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொதுவான ஸ்டான்டர்டு அம்சம்.

3 டாப் வேரியண்ட்களில் ஏர்பேக்குகள் ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கும். டாப் வேரியண்ட்டில் டிஸ்ப்ளேவுடன் கூடிய ரியர் வியூ கேமரா உண்டு. பயணங்களை இனிதாக்க 2 டின் சிடி ப்ளேயர் இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் ஸ்மார்ட் கீலெஸ் என்ட்ரி சிஸ்டத்தை கொண்டிருக்கிறது.

அடுத்த மாதம் மத்தியில் எவாலியாவை விற்பனைக்கு கொண்டு வருகிறது நிசான். எவாலியாவுக்கு விலையை மட்டும் சரியாக நிர்ணயித்துவிட்டால், நிச்சயம் மார்க்கெட்டில் மட்டுமல்ல நிசான் விற்பனையிலும் முக்கிய இடத்தை பிடித்துவிடும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 10, 2012, 12:59 [IST]
English summary
Nissan Evalia, the multi purpose vehicle from the Japanese carmaker will be launched next month. Team Drivespark test drove the mid variant Evalia car yesterday. Here is our review of the Nissan Evalia.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+