கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் எடிசன் மைக்ரா அறிமுகம்
பண்டிகை காலத்தையொட்டி கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் எடிசன் மைக்ரா காரை நிசான் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், போட்டியை சமாளிக்கவும் அனைத்து நிறுவனங்களும் ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நிசான் நிறுவனம் கூடுதல் அம்சங்கள் மற்றும் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் எடிசன் மைக்ரா காரை அறிமுகம் செய்துள்ளது.

சாதாரண மாடலைவிட ஸ்பெஷல் எடிசன் பிரைமோ மைக்ரா ரூ.22,000 கூடுதல் விலையில் கிடைக்கிறது. இதுதவிர, மைக்ரா மற்றும் சன்னி கார்களுக்கு பணம் திரும்ப பெறும் சலுகை, 500 கிராம் தங்கத்தை குலுக்கல் முறையில் வெல்லும் வாய்ப்பு, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆகியவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








