மைக்ரா, சன்னி கார்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கும் நிசான்

மைக்ராவின் பெட்ரோல் மாடலுக்கு ரூ. 50,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் இலவச இன்ஸ்யூரன்சை நிசான் வழங்குகிறது. டீசல் மைக்ராவுக்கு ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் இலவச இன்ஸ்யூரன்ஸ் வழங்கப்படுகிறது.
இதேபோன்று, சன்னி காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், இலவச இன்ஸ்யூரன்சையும் பெற முடியும். டீசல் சன்னிக்கு ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசையும், ரூ.7,000 மதிப்புடைய தங்க காசையும் வழங்குவதாக நிசான் தெரிவித்துள்ளது.
மைக்ராவின் பெட்ரோல் மாடல் ரூ.4.23 லட்சம் முதல் ரூ.5.53 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.5.98 லட்சம் முதல் ரூ.6.43 லட்சம் வரையிலான விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. சன்னியின் பெட்ரோல் மாடல் ரூ.5.95 லட்சம் விலை முதல் ரூ.7.88 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.8.14 லட்சம் முதல் ரூ.8.95 லட்சம் வரையிலான விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








