நிசானின் 'பேட்மேன்' ஸ்பெஷல் எடிசன் கார்: வெல்லப் போவது யார்?

தனது புதிய ஜூக் நிஸ்மோ மினி கிராஸ்ஓவர் காரை வரும் ஜனவரி முதல் விற்பனைக்கு கொண்டு வருகிறது நிசான். இந்த நிலையில், பேட்மேன் வரிசையில் உருவாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ள 'தி டார்க் நைட் ரைசஸ்' சினிமாவின் டிவிடி மற்றும் புளூரே வெளியீட்டுக்காக ஒரே ஒரு ஸ்பெஷல் எடிசன் ஜூக் நிஸ்மோ காரை நிசான் வடிவமைத்துள்ளது.

கருப்பு நிற மேட் பினிஷிங்குடன், பேட்மேன் சினிமாவின் நினைவூட்டும் வகையிலான பிரத்யேகஅம்சங்களுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரித்த தனது பார்ட்னரான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்காக இந்த காரை வடிவமைத்து அசத்தியிருக்கிறது நிசான். ஆன்லைனில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் ரசிகருக்கு இந்த கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

ஜனவரி ரிலீஸ்

ஜனவரி ரிலீஸ்

நிசானின் புதிய ஜூக் நிஸ்மோ மினி கிராஸ்ஓவர் கார் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.இந்த காரை பிரபலப்படுத்தும் விதமாகவே ஒரே ஒரு பேட்மேன் ஸ்பெஷல் எடிசன் காரை வடிவமைத்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 200 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பவர் & பெர்ஃபார்மென்ஸ்

பவர் & பெர்ஃபார்மென்ஸ்

ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் 7.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

மேட் ஃபினிஷிங்

மேட் ஃபினிஷிங்

ஸ்பெஷல் எடிசனாக உருவாக்கப்பட்டிருக்கும் நிஸ்மோ காரில் மேட் பினிஷிங் செய்யப்பட்டிருப்பதால் வெளிப்புறத்தில் கூடுதல் கவர்ச்சியை தருகிறது.

 பேட்மேன் சின்னம்

பேட்மேன் சின்னம்

உட்புறத்தில் பெடல்களில் பேட்மேன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்டில் பேட்மேன் சின்னம் எம்ப்ராய்டிங் செய்யப்பட்டுள்ளது.

முகப்பில் பேட்மேன் தரிசனம்

முகப்பில் பேட்மேன் தரிசனம்

முகப்பு கிரில்லில் அலுமினிய தகட்டில் செய்யப்பட்ட பேட்மேன் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் சஸ்பென்ஷன்

ஸ்பெஷல் சஸ்பென்ஷன்

ஸ்பெஷல் எடிசனுக்காக கூடுதல் உறுதிவாய்ந்த சிறப்பு சஸ்பென்ஷனை பொருத்தியிருக்கிறது நிசான்

இரட்டை வண்ண அலாய் வீல்

இரட்டை வண்ண அலாய் வீல்

கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் கொண்ட 18 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ்

ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ்

முன்புறம் போன்றே பின்புறத்திலும் ஸ்பெஷல் எடிசன் கார் என்பதை தெரிவிக்கும் வகையில் நிஸ்மோ மற்றும் பேட்மேன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

மினி கிராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த நிசான் ஜூக் நிஸ்மோ ஸ்பெஷல் எடிசன் காரி்ன் அசத்தலான பின்புற தோற்றம்.

பிப்ரவரியில் ரிசல்ட்

பிப்ரவரியில் ரிசல்ட்

இந்த ஸ்பெஷல் எடிசன் காரை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார் என்பதை பிப்ரவரியில் அறிவிக்க உள்ளது நிசான்.

More from DriveSpark

Article Published On: Friday, December 7, 2012, 11:28 [IST]
English summary
Nissan has unveiled the special edition Dark Knight Rises Juke Nismo to celebrate its partnership with Warner Bros and the release of the DVD and Blue Ray of the latest in the Christopher Nolan Batman trilogy - The Dark Knight Rises.
மேலும்... #nissan #four wheeler #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+