புதிய மாடல்களை அறிமுகப்படுத்த டொயோட்டாவு்ககு 'மூடு' இல்லையாம்!

Prius
அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியாவில் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களை டொயோட்டா ஒத்தி போட்டுள்ளது.

அடுத்தடு்த்து புதிய மாடல்களின் அறிமுகத்தால் இந்திய கார் மார்க்கெட் ரணகளப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கூலாக இந்த தகவலை தெரிவித்துள்ளது டொயோட்டா.

இதுகுறித்து டொயோட்டாவின் சந்தைப்படுத்துதல் பிரிவு துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறியதாவது:

"கடந்த ஆண்டுகளில் டொயோட்டா நல்ல வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அதேவேளை, கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த மார்க்கெட்டிலும் மந்தநிலை நீடிக்கிறது. பெட்ரோல் லிவா மற்றும் எட்டியோஸ் கார்களின் விற்பனையில் சிறிது சரிவு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், டீசல் மாடல்கள், இன்னோவா மற்றும் பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களின் விற்பனை சரியான பாதையில் செல்கிறது. கரொல்லா காரின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. அந்த ரக கார் மார்க்கெட் ஒட்டுமொத்தமாகவே கடும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

இறக்குமதி வரியால் விலை அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால் பிரையஸ் ஹைபிரிட் காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தள்ளிப்போட்டுள்ளோம். மேலும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.

காம்பெக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் உடனடியாக இறங்கும் திட்டமும் இல்லை. குறுகிய கால வர்த்தக வெற்றியை விட நீண்ட கால வர்த்தக வெற்றியை இலக்காக வைத்தே செயல்பட்டு வருகிறோம். கைவசம் உள்ள மாடல்களின் விற்பனை நன்றாக இருக்கிறது. எனவே, இந்த மாடல்களின் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்துவோம் ," என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 5, 2012, 16:32 [IST]
English summary
Japanese car maker Toyota to postpone its plans of launching new vehicles in India for next 3 years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+