ஃபியட் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வந்தது ரியோ மினி எஸ்யூவி

Premier Rio
பிஎஸ்4 மாசுக் கட்டுப்பாடு அம்சத்துடன் கூடிய ரியோ மினி எஸ்யூவியை பிரிமியர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்று முதல் இந்த புதிய டீசல் ரியோவுக்கு டெலிவிரி துவங்குகிறது.

இதுவரை பிஎஸ்3 மாசுக்கட்டுப்பாடு அம்சம் கொண்ட பீஜோ டீசல் எஞ்சினுடன் ரியோ விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த எஞ்சின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. மாநகரங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்த குறையை போக்கி தற்போது 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது ரியோ. இந்த எஞ்சின் 72 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இதன்மூலம், ரியோவின் வர்த்தக வரலாற்றில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏபிஎஸ் பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இருக்கிறது. ஆனால், ஏர்பேக் இல்லாதது ரியோவில் ஒரு குறை. ஏர்பேக்குடன் ரியோ அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறும்.

புதிய ரியோவில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபியட் மல்டிஜெட் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தரும் என்கிறது பிரிமியர். புதிய டீசல் மாடல் ரியோ ரூ.6.7 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று பிரிமியர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 55 பிரிமியரின் கார் ஷோரூம்களில் இந்த புதிய ரியோ டீசல் மாடல் கிடைக்கும். மேலும், பிரிமியருக்கு 200 அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்கள் மூலம் சேவை கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 2, 2012, 9:06 [IST]
English summary
Premier has launched BS4 complaint Rio diesel model at INR 6.7 lakhs. The company is getting 1.3 multijet diesel engine from Fiat and it can churn out 72 bhp power.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+