அதிரிபுதிரி வெற்றியாளன் ரெனோ டஸ்ட்டர் - சிறப்பு பார்வை
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் மாடல் ரெனோ டஸ்ட்டர். விற்பனையில் மட்டுமல்ல சவால் நிறைந்த இந்திய கார் மார்க்கெட்டில் ரெனோவுக்கு புதிய முகவரியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது டஸ்ட்டர்.
கம்பீரமான தோற்றம், நிறைவான விலை, சிறந்த எஞ்சின், நவீன வசதிகள் என அனைத்து விதத்திலும் நன்மதிப்பை பெற்றிருக்கும் டஸ்ட்டருக்கு 2013ம் ஆண்டின் சிறந்த கார் மாடல் விருது கிடைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் 2 விதமான டீசல் மாடல்களில் டஸ்ட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த செய்தித் தொகுப்பில் டஸ்ட்டரின் சிறப்பம்சங்களை காணலாம்.

வடிவமைப்பு
தடித்த குரோம் பட்டைகளுடன் கூடிய முகப்பு கிரில், பெரிய வீல் ஆர்ச்சுகள் ரெனோ டஸ்ட்டரை ஒரு கம்பீரமான எஸ்யூவியாக காட்டுகிறது. ரூஃப் ரெயில்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன.

மோனோகாக் சேஸிஸ்
டஸ்ட்டர் மோனோகாக் சேஸிஸில் வடிவமைக்கப்படுவதால் அதிக உறுதி, சிறந்த கையாளுமை, கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

ஹெட்லைட்
முகப்பு கிரில்லுடன் இணையாக ஒரே நேர்க்கோட்டில் ஒத்துப் போகும் வகையில் சிறப்பான வடிவமைப்புடன் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது.

பனி விளக்குகள்
பனி விளக்குகள் அழகு சேர்ப்பதுடன் பனிக் காலங்களில் பாதுகாப்பான பயணத்துக்கு உதவும்.

உள்ளலங்காரம்
3 விதமான உள்ளலங்காரத்துடன் டஸ்ட்டர் கிடைக்கிறது. ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டில் லெதர் அப்ஹோல்ஸ்டரியுடன் கிடைக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரிப் மீட்டர், எரிபொருள் மானி, ஸ்பீடோ மீட்டர் ஆகியவற்றுடன் சராசரி வேகம், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பெறும் வசதியை கொண்டிருக்கிறது.

கன்ட்ரோல் சுவிட்சுகள்
ஸ்டீயரிங் வீலுக்கு கீழே ஆடியோ கன்ட்ரோல் மற்றும் போன் கன்ட்ரோல் சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. டிரைவிங்கின்போது இது உதவிகரமாக இருக்கும்.

சென்ட்ரல் கன்சோல்
சென்ட்ரல் கன்சோலில் 2 டின் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. சிடி, எம்பி3 பிளேயருடன் ஏஎம், எஃப்எம் அலைவரிசை ரேடியோ கேட்கும் வசதி மற்றும் யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் இன் போர்ட் ஆகிய வசதிகள் உண்டு. 4 ஸ்பீக்கர்களும் இணைக்கப்பட்டுள்ளன. தவிர, புளூடூத் மூலம் மொபைல்போனை இணைத்து பாடல்களை கேட்கும் வசதியும் இருக்கிறது.

ரீடிங் லேம்ப்
ரீடிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ரீடிங் லேம்ப்பை தங்களது வசதிக்கேற்ப பயணிகள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

டில்ட் ஸ்டீயரிங்
டிரைவர் தனது உயரம், வசதிக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள டில்ட் ஸ்டீயரிங் வசதி உள்ளது.

எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் ரியர் மிரர்
எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் ரியர் வியூ மிரர் பொருத்தப்பட்டிருப்பது டிரைவருக்கு கூடுதல் வசதியை தரும்.

எஞ்சின்
104 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட 2 மாடல்களில் டஸ்ட்டர் வந்துள்ளது. 84 பிஎச்பி மற்றும் 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இரண்டு டீசல் மாடல்களில் கிடைக்கிறது.

லெதர் இருக்கைகள்
ஹெட்ரெஸ்ட்டுடன் கூடிய லெதர் இருக்கைகள் உண்டு.

ரியர் ஏசி வென்ட்
இரண்டாவது வரிசைக்கு பிரத்யேக கன்ட்ரோல் சுவிட்சுகளுடன் கூடிய ஏசி வென்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு மிகுந்த சவுகரியத்தை தரும்.

சார்ஜிங் பாயிண்ட்
மொபைல்போன், லேப்டாப், வீடியோ கேம் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான 12 வோல்ட் சார்ஜிங் பாயின்ட் இருக்கிறது.

8 வே அட்ஜெஸ்ட் டிரைவர் சீட்
8 வே அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட டிரைவர் இருக்கை மிகுந்த சொகுசையும், சவுகரியத்தையும் தரும்.

பார்க்கிங் சென்சார்
பார்க்கிங் சென்சார் பொருத்தப்பட்டிருப்பதால் ரிவர்ஸ் எடுக்கும்போதும், பார்க்கிங் செய்யும்போது அருகிலுள்ள பொருட்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் வசதி இருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்
பிரேக் அசிஸ்ட், இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருப்பதால் மிகுந்த பாதுகாப்பான பயணத்தை வழங்கும். அவசரத்தில் பிரேக் பிடிக்கும்போது கூட கார் கவிழாது. மேலும், இரட்டை காற்றுப் பைகள் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

பூட் ரூம்
475 லிட்டர் பூட் ரூமை கொண்டிருப்பதால் அதிக பொருட்களை வைக்க முடியும். நீண்ட தூர பயணங்களுக்கு சிறந்த காராக இருக்கும். மேலும், இரண்டாவது வரிசை இருக்கைகள் மடக்கும் வசதியை கொண்டிருப்பதால் 1064 லிட்டர் வரை பூட் ரூமை அதிகரித்துக் கொள்ள முடியும்.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.24 கிமீ மைலேஜையும், 85 பிஎஸ் பவர் டீசல் மாடல் லிட்டருக்கு 20.45 கிமீ மைலைஜையும் தரும் என்கிறது ரெனோ.

கிரவுன்ட் கிளியரன்ஸ்
205 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால் டஸ்ட்டரை ஓட்டும்போது வேகத்தடைகள், திடீர் பள்ளங்களை கண்டவுடன் பதற வேண்டாம்.

சென்னை ஆன்ரோடு விலை
பெட்ரோல்
ஆர்எக்ஸ்இ : ரூ.8,46,812
ஆர்எக்ஸ்எல் : ரூ.9,62,335
டீசல் மாடல் 85 பிஎச்பி
ஆர்எக்ஸ்இ : ரூ.9,39,229
ஆர்எக்ஸ்எல் : ரூ.10,54,752
ஆர்எக்ஸ்எல்(ஓ) : ரூ.12,23,113
110பிஎச்பி டீசல் மாடல்
ஆர்எக்ஸ்எல் : ரூ.12,21,113
ஆர்எக்ஸ்இசட் : ரூ.13,41,752
ஆர்எக்ஸ்இசட்(ஓ) : ரூ.13,77,901

நிறைவு
5 பேர் செல்வதற்கு நிறைவான கார் டஸ்ட்டர். பின்புறம் சைல்டு சீட் ஆப்ஷனலாக டீலர்களில் கிடைக்கிறது. எந்த ஒரு சாலைநிலைகளுக்கும் ஏற்றதாகவும், போட்டியாளர்களை விட நிறைவான விலையில் கிடைப்பதும் டஸ்ட்டர் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








