ரெனோ டஸ்ட்டர்: முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

8 வே அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட இருக்கை வசதி கொண்டிருப்பதால் உயரத்திற்கு தக்கவாறு எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
டில்ட் ஸ்டீயரிங்கும் ஓட்டுவதற்கு டிரைவருக்கு நிறைவாக இருக்கும்.
5.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டிருப்பதால் குறுகலான மற்றும் சிறிய இடத்திலும் அழகாக திருப்ப முடியும்.
குறைவான ஆர்பிஎம் வேகத்தில் அதிக டார்க்கை வழங்கும் என்பதால் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறந்த காராக இருக்கும். மேலும், ஐடிலிங்கில் இருக்கும்போது எஞ்சினிலிருந்து அதிக சப்தம் வராத அளவுக்கு சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது ரினால்ட்.
அதிக வேகத்தில் செல்லும்போது வெளியிலிருந்து வரும் சப்தங்களை கேபினுக்குள் வராதவாறு தடுக்கும் வகையில் கட்டுமானம் செய்துள்ளது ரினால்ட்.
மோனோகாக் எனப்படும் ஒரே வார்ப்பில் சேஸிஸ் தயாரிக்கப்படுவதால் அதிக பேலன்ஸ், ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் சிறப்பாக இருக்கும்.
சென்ட்ரல் கன்சோலில் மியூசிக் சிஸ்டம் அழகாக பொருத்தப்பட்டுள்ளது. பார்க்கவும் கண்ணாபின்னாவென்று இல்லாமல் இருப்பதும் ஒரு ப்ளஸ்தான்.
1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இதில், டீசல் மாடல் இரண்டு ஆற்றலை வெளிப்படுத்தும் மாடல்களில் கிடைக்கும்.
டீசல் மாடல் லிட்டருக்கு 20.45 கிமீ வரை மைலேஜ் தருவதாக ரெனோ தெரிவித்துள்ளது.
ரூ.7.19 லட்சம் முதல் ரூ.11.29 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வசதிகளை பொறுத்து 8 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








