இன்னும் ஓர் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டரை களமிறக்கும் ரெனோ

Renault duster
டஸ்ட்டர் விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் நிலையில், தோற்றத்தில் படு கவர்ச்சிகரமான புதுப்பொலிவு பெற்ற டஸ்ட்டரை ரெனோ இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

காம்பெக்ட் எஸ்யூவி ரகத்தில் அறிமுகமான டஸ்ட்டர் பட்ஜெட் விலை கொண்ட எஸ்யூவி மார்க்கெட்டை அதகளப்படுத்தி வருகிறது. நீண்ட காலமாக நான்தான் நம்பர்-1 என்று இருந்த கார் மாடல்களை அறிமுகமாகி ஒரு சில மாதங்களில் ஓவர்டேக் செய்துவிட்டது டஸ்ட்டர்.

முன்பதிவு பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் நிலையிலும் இதுவரை 20,000 கார்களை டெலிவிரி கொடுத்து முடித்துவிட்டது ரெனோ. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் புதிய தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ரெனோ.

2014ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரெனோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹெட்லைட், கிரில் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் கூடுதல் வசீகரத்தை பெற்றிருக்கிறது டஸ்ட்டர்.

மேலும், ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட பல புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இந்திய மார்க்கெட்டை ஆக்கிரமிக்க தயாராகி வருவதால் மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டரை இறக்கி மார்க்கெட் பங்களிப்பை தக்கவைத்துக் கொள்வது என ரெனோ கணக்கு போட்டு வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 27, 2012, 10:55 [IST]
English summary
Renault now and the company is looking at a major facelift for the Duster. The new Duster is scheduled to roll-out by early 2014 and is expected to make its inroads into India by mid-2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+