2013ம் ஆண்டுக்கான சிறந்த கார் விருதை வென்ற டஸ்ட்டர்!

ஆட்டோமொபைல் ஊடகத் துறையின் கூட்டமைப்பு ஆண்டுதோறும் சிறந்த கார் மற்றும் பைக் மாடல்களுக்கு விருது அளித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2013ம் ஆண்டுக்கான விருதுகள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆட்டோமொபைல் ஊடகத் துறையின் பிரபல இதழ் மற்றும் செய்தித்தாள்களின் ஆசிரியர்களை நீதிபதிகளாக கொண்டு வாக்கெடுப்பு அடிப்படையில் சிறந்த கார் மற்றும் பைக் மாடல்களை தேர்வு செய்யப்பட்டன. விலை, எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு வசதிகள், ஃபெர்ஃபார்மென்ஸ் மறங்றும் புதுமையான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கருத்தில்க்கொள்ளப்பட்டன.
இதுதவிர, மேம்படுத்தப்பட்ட மாடலாக இல்லாமல், புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும், இந்தியாவிலேயே உற்பத்தி அல்லது அசெம்பிளிங் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், கடும் போட்டிக்கு மத்தியில் 2013ம் ஆண்டுக்கான சிறந்த காருக்கான விருதை ரெனோ டஸ்ட்டர் வென்றுள்ளது. மாருதி எர்டிகா இரண்டாம் இடத்தையும், ஹூண்டாய் எலன்ட்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றன. 2013ம் ஆண்டுக்கான பைக் மாடல்கள் விருத்துக்கும் ஏராளமான மாடல்கள் போட்டி போட்டன. இதில், 2013ம் ஆண்டின் சிறந்த பைக்காக கேடிஎம் டியூக் 200 பைக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








