ஜனவரி முதல் கார் விலையை உயர்த்தும் ரெனோ

உற்பத்தி செலவீனம், ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கங்களை காரணம் காட்டி அனைத்து நிறுவனங்களும் விலை உயர்வை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன.
இந்த வரிசையில், பிரெஞ்ச் கார் தயாரிப்பாளர் ரெனோவும் சேர்ந்துள்ளது. அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனத்தை சமாளிக்க விலை உயர்வு ஒன்றே வழியாக ரெனோ குறிப்பிட்டுள்ளது.
எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெனோவின் விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வரும் டஸ்ட்டரின் விலையை செப்டம்பரில் ரூ.40,000 வரை ரெனோ உயர்த்தியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








