2014ல் லாட்ஜி எம்பிவியை அறிமுகப்படுத்தும் ரினால்ட்

டஸ்ட்டர் எஸ்யூவியின் விற்பனை கொடுத்த உற்சாகத்தில் இருக்கும் ரெனோ அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை களமிறக்கும் பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. மேலும், அனைத்து ரகங்களிலும் கார்களை நிலைநிறுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில், எம்பிவி செக்மென்ட்டிலும் ரெனோ களமிறங்குவதற்கு முடிவு செய்திருக்கிறது.
ஐரோப்பிய மார்க்கெட்டில் டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் லாட்ஜி எம்பிவியை ரெனோ நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கிவிட முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்தான் இந்த புதிய எம்பிவி ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், வரும் 2014ல் நடைபெற உள்ள டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய காரை அறிமுகப்படுத்த ரெனோ திட்டமிட்டிருக்கிறது.
7 சீட்டர் காராக வரும் இந்த புதிய எம்பிவி மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும். ஆனால், டொயோட்டா இன்னோவாவைவிட குறைந்த விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரிலும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும். மேலும், 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தாராள இடவசதியுடன், சிறந்த அம்சங்களை கொண்டதாக லாட்ஜி இருக்கும்.


Click it and Unblock the Notifications








