ரூ.7.19 லட்சத்தில் ரெனோ டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவி அறிமுகம்
வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டிய ரெனோ டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவி சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.7.19 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் வந்து மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட 2 மாடல்களில் டஸ்ட்டர் வந்துள்ளது. மேலும், இதில், டீசல் எஞ்சின் 84 பிஎச்பி மற்றும் 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இரண்டு மாடல்களில் வந்துள்ளது. தவிர, 2 பெட்ரோல் வேரியண்ட் மற்றும் 6 டீசல் வேரியண்ட்கள் என மொத்தம் 8 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
டில்ட் ஸ்டீயரிங், கீ லெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் ரியர் வியூ மிரர் என ஏராளமான வசதிகளுடன் வந்துள்ளது. ஏபிஎஸ், ஏர்பேக்குகள் கொண்ட மாடலும் கிடைக்கும்.
மொத்தத்தில் பிற மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரெனோ டஸ்ட்டர் களத்தில் குதித்துள்ளது. இதன் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 20 கிமீ வரை மைலேஜ் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டஸ்ட்டருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. இதுவரை 1,000க்கும் மேற்பட்ட புக்கிங்குகளை டஸ்ட்டர் பெற்றுள்ள தெம்போடு இன்று சவாலான விலையில் வந்திறங்கியுள்ளது.
விலை விபரம்:
டஸ்ட்டர் 1.6 ஆர்எக்ஸ்இ(பெட்ரோல்) : ரூ.7.19 லட்சம்
டஸ்ட்டர் 1.6 ஆர்எக்ஸ்எல்(பெட்ரோல்) : ரூ.8.19 லட்சம்
டஸ்ட்டர் 1.5 டிசிஐ ஆர்எக்ஸ்இ(டீசல்) : ரூ.7.99 லட்சம்
டஸ்ட்டர் 1.5 டிசிஐ ஆர்எக்ஸ்எல்(டீசல்) : ரூ.8.99 லட்சம்
டஸ்ட்டர் 1.5 டிசிஐ ஆர்எக்ஸ்எல் ஆப்ஷன் : ரூ.9.99 லட்சம்
டஸ்ட்டர் 1.5 டிசிஐ ஆர்எக்ஸ்எல் 110 : ரூ.9.99 லட்சம்
டஸ்ட்டர் 1.5 டிசிஐ ஆர்எக்ஸ்இசட் : ரூ.10.99 லட்சம்
டஸ்ட்டர் 1.5 டிசிஐ ஆர்எக்ஸ்இசட் ஆப்ஷன்: ரூ.11.29 லட்சம்


Click it and Unblock the Notifications









