பெட்ரோல் மாடல் பல்சை விற்பனைக்கு கொண்டு வந்த ரெனோ

Pulse
ரூ.4.25 லட்சம் விலையில் பெட்ரோல் மாடல் பல்ஸ் காரை ரினால்ட் நிறுவனம் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நிசான் மைக்ராவின் அச்சு அசலான பல்ஸ் காரை ரினால்ட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. முதலில் டீசல் மாடலில் மட்டும் பல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்று பெட்ரோல் மாடல் பல்ஸ் காரையும் ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

நிசான் மைக்ராவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 3 சிலின்டர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பல்ஸ் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல் மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய மூன்று வேரியன்ட்டுகளில் பல்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், டாப் வேரியன்ட்டான ஆர்எக்ஸ்இசட் வேரியன்ட்டில் ஏபிஎஸ், ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை நிர்ந்தர அம்சங்களாக இருக்கும்.

ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியன்ட் ரூ.4.25 லட்சத்திலும், ஆர்எக்ஸ்எல் மிட் வேரியன்ட் ரூ.4.99 லட்சத்திலும், ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியன்ட் ரூ.5.55 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 11, 2012, 11:09 [IST]
English summary
French Car maker Renault India has launched Petrol version Pulse today. The pulse equipped with 1.2 liter petrol engine and it churn out 80 PS power. The petrol version pulse available in 3 variants starting price at Rs.4.25 lakhs(Ex showroom Delhi)
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+