2 புதிய குட்டிக் கார்களை தயாரிக்கும் ரெனோ: 2014ல் அறிமுகமாகிறது

Renault Capture Concept
மிகக்குறைந்த விலையி்ல் 2 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த ரெனோ திட்டமிட்டுள்ளது. இதில், ஒன்று டாடா நானோவுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

நிசான் நிறுவனத்துடன் இணைந்து இந்த 2 புதிய கார் மாடல்களையும் ரெனோ தயாரிக்கிறது. ஒன்று 3000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.2.15 லட்சம்) விலை கொண்டதாக இருக்கும். விலை, வடிவமைப்பு ஆகிய அனைத்திலும் டாடா நானோவுக்கு போட்டியை கொடுக்கும்.

மற்றொன்று 5000 யூரோ ( இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சத்திற்குள்) விலை கொண்டதாக இருக்கும். ஆல்ட்டோ, இயான் கார்களுக்கு போட்டியை கொடுக்கும். 2014ம் ஆண்டு இந்த கார்கள் விற்பனைக்கு வரும்.

இந்தியாவில் இந்த கார்கள் நிசானின் டட்சன் பிராண்டில் அறிமுகம் செய்யப்படுமா அல்லது ரெனோ பிராண்டில் வருமா என்பது குறித்து தெரியவில்லை. ஏனெனில், இனி வரும் காலங்களில் பிரத்யேக மாடல்களை அறிமுகம் செய்ய இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

இந்தியா உள்ளிட்ட வளரும் கார் சந்தைகளில் இந்த புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர நிசான்-ரெனோ கூட்டணி திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ் செய்தி இணையதளம் ஒன்றில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, November 22, 2012, 12:35 [IST]
English summary
French carmaker Renault is planning to launch two new low cost models designed specifically for emerging markets like India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+