ஸ்கேலாவை விற்பனைக்கு கொண்டு வந்தது ரினால்ட்
இந்திய மார்க்கெட்டில் ரூ.6.99 லட்சம் ஆரம்ப விலையில் ஸ்கேலா மிட்சைஸ் காரை ரினால்ட் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

ஸ்கேலா முகப்பு
குரோம் பூச்சுடன் ரேடியேட்டர் கிரில், கரும்புகை பூச்சுடன் கூடிய ஹெட்லைட், பனி விளக்குகள், டூவல் டோன் பம்பர் ஆகியவை ஸ்கேலாவின் முன்பக்கத்தை அலங்கரிக்கின்றன.

ஸ்கேலா பின்புற வடிவமைப்பு
பின்புறத்தில் டூவல் டோன் ரியர் பம்பர், டேஞ்சர் விளக்குகளின் ஊடே குரோம் பினிஷிங் ஆகியவை ஸ்கேலாவை வேறுபடுத்தும் அம்சங்கள்.

உட்புற வடிவமைப்பு
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள்,, பின்புற ஏசி வென்ட்டுகள் என உட்புறத்தை பார்த்தால் வசதிகளும், தரமும் என நிரம்பியிருக்கிறது.

உள்ளலங்காரம்
ஸ்கேலாவின் உட்புறத்தில் பெரும்பாலான பகுதிகள் லெதர் அப்ஹோல்ஸ்டரி அலங்கரிக்கிறது. இது கூடுதல் பிரிமியம் லுக்கை ஸ்கேலாவுக்கு வழங்குகிறது.

வசதி
சென்ட்ரல் கன்சோலுக்கும், கியர் லிவருக்கு இடையில் சிறிய பாட்டில்களை வைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது.

பாதுகாப்பு
டிரைவர் மற்றும் முன்புற பயணிக்கு டூவல் ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களிலும் நிறைவாக இருக்கிறது.
நிசான் நிறுவனம் விற்பனை செய்து வரும் மைக்ரா ஹேட்ச்பேக் காரை பல்ஸ் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து ரினால்ட் விற்பனை செய்து வருகிறது. இதேபோன்று, தற்போது நிசானின் வெற்றிகரமான மாடலாக வலம் வரும் சன்னி செடான் காரை ஸ்கேலா என்ற பெயரில் ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.
முன்புறம் மற்றும் பின்புறத்தில் சிறு சிறு மாறுதல்களை செய்து சன்னியை ஸ்கேலாவாக மாற்றியிருக்கிறது ரினால்ட். சன்னியில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஸ்கேலா வந்திருக்கிறது. பெட்ரோலில் மற்றும் டீசலில் இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய மிட்சைஸ் செடான் கார் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கும். ஆனால், விலை விபரம் தற்போது தெரிவிக்கப்படவில்லை.
அதேநேரத்தில் நிசான் சன்னியை விட ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு கூடுதலான விலையில் ஸ்கேலா விற்பனைக்கு வந்துள்ளது. சன்னியின் பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் கார் ரூ.5.93 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ஆனால், ஸ்கேலாவின் பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.6.99 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்கேலாவின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்:
பெட்ரோல்:
ஆர்எக்ஸ்இ : ரூ.6.99 லட்சம்
ஆர்எக்ஸ்எல் : ரூ.7.85 லட்சம்
டீசல்:
ஆர்எக்ஸ்எல் : ரூ.8.69 லட்சம்
ஆர்எக்ஸ்இசட் : ரூ,9.57 லட்சம்


Click it and Unblock the Notifications








