இங்கிலாந்துக்கு டஸ்ட்டர் ஏற்றுமதியை துவங்கிய ரெனோ!

இந்தியாவில் ரெனோவின் டஸ்ட்டர் எஸ்யூவி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து டஸ்ட்டரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரெனோ முடிவு செய்தது.
முதலாவதாக இங்கிலாந்துக்கு டஸ்ட்டர் எஸ்யூவியின் ஏற்றுமதி துவங்கப்பட்டிருக்கிறது. மொத்தம் முதல் லாட்டில் 350 கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் தவிர இந்திய மார்க்கெட்டில் இதுவரை அறிமுகம் செய்ய்பபடாத 4 வீல் டிரைவ் மாடலும் அடங்கும்.
4 வீல் டிரைவ் மாடலுக்காக முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து ரெனோ அசெம்பிள் செய்கிறது. உலக அளவில் சென்னை ஆலையில் மட்டும்தான் வலதுபக்க டிரைவிங் கொண்ட டஸ்ட்டர் எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது.
எனவே, இங்கிலாந்து தவிர பிற வலதுபக்க டிரைவிங் கொண்ட மார்க்கெட்டுகளுக்கு டஸ்ட்டரை ஏற்றுமதி செய்ய ரெனோ திட்டமிட்டுள்ளது. எனவே, வரும் காலத்தில் சென்னை ஆலையை விரிவுப்படுத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








