விரைவில் இங்கிலாந்துக்கு டஸ்ட்டரை ஏற்றுமதியை துவங்கும் ரெனோ

கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவி ரினால்ட் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக மாறியிருக்கிறது. இதுவரை 15,000 டஸ்ட்டர் எஸ்யூவிக்களை ரினால்ட் விற்பனை செய்துள்ளது. தவிர, முன்பதிவு செய்தவர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், டஸ்ட்டர் எஸ்யூவியை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது ரினால்ட். இந்த மாத இறுதியிலிருந்து டஸ்ட்டர் ஏற்றுமதி துவங்கும் என ரினால்ட் தெரிவித்துள்ளது. ஆனால், இங்கிலாந்துக்கு செல்லும் டஸ்ட்டர் டேஸியா பிராண்டில் செல்ல இருக்கிறது.
இதுகுறித்து ரினால்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் மார்க் நசீப் கூறியதாவது:
"இந்திய மார்க்கெட்டில் டஸ்ட்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மாத இறுதி முதல் இங்கிலாந்துக்கு ஏற்றுமதியும் துவங்க இருக்கிறோம்.
இதற்காக, சென்னையிலுள்ள எங்களது ஆலையில் இரண்டு உற்பத்திப் பிரிவுகளை டஸ்ட்டருக்காகவே ஒதுக்கியுள்ளோம். அடுத்த ஆண்டு ஏப்ரலில் டஸட்டருக்காக மூன்றாவது உற்பத்தி பிரிவும் துவங்கப்பட இருக்கிறது.
இந்தியா, இங்கிலாந்து போன்று வலது பக்க டிரைவிங் கொண்ட தென் ஆப்ரிக்கா, இந்தோனேஷியா உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கும் டஸ்ட்டரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேவேளை, இந்திய மார்க்கெட்டிலும் டஸ்ட்டர் விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்," என்றார்.


Click it and Unblock the Notifications








