திருமண கால ஸ்பெஷல் எடிசன் கார்கள்: ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகம்

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகம் செய்துள்ளதாக ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய பொது மேலாளர் ஹெர்பிரைடு ஹஸினோர்ல் கூறியதாவது,
" அக்டோபர் 30ந் தேதி முதல் திருமண விழாக் காலம் துவங்குகிறது. இதையடுத்து ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
எங்களிடம் 2 வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லத் திருமண விழாவில் மணமக்களுக்கு பரிசளிப்பதற்காக காரை பிரத்யேக அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து தர கேட்டுக்கொண்டனர். இதனை மனதில்கொண்டே இந்த சிறப்பு பதிப்பு கார்களை கஸ்டமைசேஷன் செய்து தர முடிவு செய்தோம்.
இந்த கார் முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பதிற்கேற்ப உட்புறம் கஸ்டமைசேஷன் செய்து தரப்படும். மேலும், உட்புறத்தில் மணமக்களின் பெயர்களும் பொறித்து தரப்படும். இந்த கார்களின் டேஷ்போர்டு, இருக்கை உள்ளிட்டவை முழுக்க முழுக்க கைவேலைப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும்," என்று கூறினார்.
ரோல்ஸ்ராய்ஸ் இரண்டு கார் மாடல்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வரகிறது. இதில், பான்டம் ரூ. 4.5 கோடி விலையிலும், கோஸ்ட் ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








