பிளேபாய் பரபரப்பு ஷெர்லின் சோப்ரா பிஎம்டபிள்யூ கார்-சிறப்பு பார்வை

Posted By:

பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுக்கப் போவதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா.

ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் என்று வடிவேல் பெருமையாக கூறும் காட்சியை போன்று, பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுக்கப் போகும் முதல் இந்திய பெண் என்று மிக மிக பெருமையாக கூறியுள்ளரார் ஷெர்லின். அவர் எப்படி போஸ் கொடுக்கப் போகிறார் என்று டென்ஷனுடன் திரிய துவங்கியுள்ளனர் பலர்.

ஆனால், கடந்த ஜனவரியில் தனது பிறந்த நாளின் போது தனது நிர்வாண படங்களை ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் இந்த அம்மணி. பிறகு விஷயம் தெரிந்த அந்த பதிவை ட்விட்டர் நீக்கிவிட்டது.

இந்த நிலையில், பிளேபாய் இதழை வைத்து மீண்டும் அச்சில் ஏறியுள்ள இவர் திடீரென கோடிக்கணக்கானோரின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார். ஆனால், அவரது கனவில் யார் இருக்கிறார் என்று ஆராய்ந்த போது அவருக்கு விருப்பமான முக்கிய விஷயங்களில் அவரது பிஎம்டபிள்யூ காரும் ஒன்று என தெரியவந்தது.

அவர் வைத்திருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் பிரிமியம் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. இது 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 245 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது. 4.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 407 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதிலும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ் வசதிகொண்ட இந்த எஸ்யூவி அதிக இடவசதியை கொண்டிருக்கிறது. மேலும், கிளைமேட் கன்ட்ரோல் வசதி, 2 ஸோன் ஏசி,12 ஸ்பீக்கர்களுடன் கூடிய 6 சிடி சேஞ்சர் டிவிடி ப்ளேயர் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

அனைத்து பக்கங்களிலும் ஏர்பேக்குகள், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் என பாதுகாப்பு வசதிகளையும் அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள் என பாதுகாப்பு அம்சங்களுக்கு அளவே இல்லை.

தேர்ந்தெடுக்க வசதியாக 7 வண்ணங்களில் கிடைக்கிறது. பீயெஜ் வண்ண இன்ட்டிரியர் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் சொகுசு தோற்றத்தை இன்னும் ஒருபடி மேலே தூக்குகிறது. ஆட்டோமேட்டிக் கண்ணாடி கூரை வசதியும் இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி ரூ.62 லட்சம் முதல் ரூ.81 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

English summary
Sherlyn Chopra, the Indian beauty now in the news for making it to the front page of Playboy has her own black beauty - BMW X5. She bought the premium car in 2011. The X5 is a blend of beauty and power.
Please Wait while comments are loading...

Latest Photos