ரஞ்சிதாவின் மனதை கொள்ளயடித்த ஸ்கோடா லாரா!
நடிகையாக பிரபலமடைந்ததைவிட நித்தியானந்தாவின் 'பரம பக்தை' என்ற முறையில் ரஞ்சிதா உலக அளவில் பிரபலமடைந்துவிட்டார். நித்தியானந்தாவுக்கு சிஷ்யர்கள் லேப்டாப், ஐபோன் என்று ஹைடெக் சாதனங்களுடன் இருப்பதை விரும்புவார். அதில், காரும் அடக்கம்.
அந்த வகையில், நித்தியானந்தாவுடன் 'குருசிஷ்யை' உறவை பேணி வரும் ரஞ்சிதா பிரிமியம் பிராண்டு அந்தஸ்து பெற்ற ஸ்கோடா நிறுவனத்தின் லாரா செடான் காரைத்தான் வைத்திருக்கிறார்.

ஸ்போர்ட்டி வடிவமைப்பு கொண்ட லாராவுக்கு இந்திய மார்க்கெட்டில் தனி ரசிகர்களே இருக்கின்றனர். அந்த வகையில், லாரா ரஞ்சிதாவை கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. க்ரோம் பூச்சுடன் கூடிய முகப்பு கிரில்கள், கண்களை விரிய வைக்கும் ஹெட்லைட்டின் அற்புத வடிவமைப்பு, கூர்மையாக வந்து முடியும் பேனட் ஆகியவை லாராவின் ப்ளஸ் பாயிண்டுகள்.
பக்கவாட்டு பகுதியில் இழைந்தோடும் மெல்லிய பாடி லைன்கள், பின்பக்கம் 'கெத்' தோற்றம் ஆகியவை லாராவுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை பெற்று தந்துள்ளது. 16 அலாய் வீல் லாராவை சொக்க வைக்கும் கவர்ச்சி கன்னியாகவே மாற்றுகிறது.
மரவேலைப்பாடுகள், க்ரோம் பூச்சு கொண்ட ஹேண்டில்கள் என லாராவின் உட்புறத்தை பார்த்தவுடன் ஸ்கோடாவின் கைவண்ணம் பளிச்சிடுகிறது. முன் இருக்கைகள் இலகுவாக டிரைவிங் செய்ய அத்துனை வசதிகளையும் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்னிருக்கை போதும் போதும் என்ற அளவுக்கு மிக தாராளமான இடவசதியை கொண்டிருக்கிறது.
பின் இருக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் ஹேண்ட் ரெஸ்டில் பொருட்களை வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் லெதர் இருக்கைகள் கூடுதல் மென்மையான அனுபவத்தையும், கூடுதல் சொகுசையும் தரும் என்பது உறுதி.
சென்ட்ரல் கன்சோலில் 6.5 இஞ்ச் தொடுதிரை கொண்டிருக்கிறது. வழிகாட்டும் வசதி, பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும். வெளிப்புற தட்பவெப்பத்திற்கு தக்கவாறு உட்புறத்தில் ஏசியை கூட்டி குறைக்கும் க்ளைமேட் கன்ட்ரோல், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் இருக்கிறது.
க்ரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ், காற்றுப் பைகள் என சகல சவுபாக்கியங்களும் உண்டு. 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் 118 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் எஞ்சின் 81 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.
சென்னையில் ஸ்கோடா லாரா ரூ.13.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








