டஸ்ட்டருக்கு போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா

Skoda Polar
டஸ்ட்டருக்கு போட்டியாக புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை ஸகோடா களமிறக்குகிறது. போலார் என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி 2015ம் ஆண்டில் மார்க்கெட்டிற்கு வர இருக்கிறது.

காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பும், ஈர்ப்பும் கார் நிறுவனங்களை இந்த பிரிவில் விரைவில் இறங்கிவிட முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில், தற்போது ஸ்கோடா ஆட்டோவும் சேர்கிறது. ஃபோக்ஸ்வேகனின் அடுத்த தலைமுறை எம்க்யூபி பிளாட்பார்மில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை வடிவமைக்கிறது. ஆனால், இந்த எஸ்யூவி 4 மீட்டருக்கும் சற்று அதிக நீளம் கொண்டதாக இருக்கும்.

ஸ்கோடா தற்போது விற்பனை செய்து வரும் யெட்டி பிரிமியம் எஸ்யூவிக்கு கீழே இந்த புதிய எஸயூவி நிலைநிறுத்தப்படும். பேஸ் மாடல் ப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தையும், டாப் வேரியண்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தையும் கொண்டிருக்கும்.

கடந்த மாதம் பிரேசில் ஆட்டோ ஷோவில் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்திய டைகுன் எஸ்யூவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இது இருக்கலாம் என யூகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது.

Image source: Automobile-Magazine.fr

Most Read Articles
மேலும்... #four wheeler #ஸ்கோடா
English summary
Czech brand Skoda is planning to launch new crossover in global markets by 2015.
Story first published: Thursday, November 29, 2012, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X