அமெரிக்காவில் திவால் நோட்டீஸ் தாக்கல் செய்த சுஸுகி

Suzuki Logo
அமெரிக்காவில் விற்பனை சரியில்லாமல் நிதிநெருக்கடியில் சிக்கிய சுஸுகி கார் நிறுவனம் திவால் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது.

மாருதியின் தாய் நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுஸுகி சிறிய கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. அதேநேரம், அமெரிக்காவில் தாராள இடவசதி கொண்ட பெரிய கார்களுக்குத்தான் மார்க்கெட். அதனால், அமெரிக்காவில் சுஸுகியின் கார் விற்பனை எதிர்பார்த் அளவு இல்லை.

இதனால், அந்த நிறுவனம் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஜெனரல் மோட்டார்ஸ் வழியை பின்பற்றி அமெரிக்க சட்டத்தின் பகுதி 11ன் படி திவால் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், டீலர்களுக்கு அல்லது அந்நாட்டை சேர்ந்த பிற நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதிலிருந்து விலக்கு கிடைக்கும். நிதி நெருக்கடியிலிருந்து மீண்டும் மீள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

திவால் நோட்டீஸ் அளித்த கையோடு கார் விற்பனையை அடியோடு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சர்வீஸ் மற்றும் வாரண்டி சேவைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்காவில் இருசக்கர வாகன விற்பனை தொடரும் என சுஸுகி அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்திய மார்க்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்த சுஸுகி முடிவு செய்துள்ளது. போட்டியாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்கவும் அந்த நிறுவனம் பல புதிய மாடல்களை களமிறக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறது.

Most Read Articles
English summary
Suzuki has filed for bankruptcy under Chapter 11, the same rules that helped General Motors and Chrysler go bankrupt and come out in a better financial shape.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X