ஜப்பானில் லிட்டருக்கு 28.8 கிமீ மைலேஜ் தரும் வேகன்-ஆர் அறிமுகம்:

"இஎன்இ சார்ஜ்" என்ற புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இந்த வேகன்-ஆர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு சுஸுகி காப்புரிமையையும் பெற்றுள்ளது. 52 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 660சிசி திறன் கொண்ட இதன் பெட்ரோல் எஞ்சின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.
பிரேக்கிலிருந்து வெளிப்படும் ஆற்றலை லித்தியம் அயான் பேட்டரியில் சேமித்து அதன் மூலம் இதன் எலக்ட்ரிக் மோட்டார் இயங்கும். இதனால், சிறிதளவு கூடுதல் ஆற்றல் எஞ்சினுக்கு கிடைக்கும். இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் மூலம் ஒரு லிட்டருக்கு 28.8 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும் என சுஸுகி தெரிவித்துள்ளது.
மேலும், இதன் ஏர்கண்டிஷனும் குறைந்த மின்சக்தியை எடுத்துக்கொண்டு இயங்கும் ஈக்கோ கூல் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வால் தட்டு தடுமாறி நிற்கும் இந்திய மார்க்கெட்டில் இந்த புதிய வேகன் ஆர் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வேகன் ஆர் இந்திய மதிப்பில் ரூ.8 லட்சத்துக்கு விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








