இத்தாலியில் அறிமுகமான ஸ்விப்ட் ஸ்பெஷல் ஆல் வீல் டிரைவ் மாடல்- சிறப்பு தகவல்கள்

சர்வதேச மார்க்கெட்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஸ்விப்ட் மாடல் விற்பனை செய்யப்படுவது அறிந்த ஒன்றுதான். இந்த நிலையில், ஸ்பெஷல் எடிசன் ஆல் வீல் டிரைவ் ஸ்விப்ட் காரை இத்தாலியில் அறிமுகம் செய்துள்ளது சுஸுகி. அவுட்டோர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்விப்ட் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

கருப்பு வண்ண பூச்சுடன் கூடிய முன்பக்க கிரில், ரியர் சம்ப் கார்டு, சைடு ஸ்கர்ட், வீல் ஆர்ச் கார்டு, 4*4 டீகல்கள் என கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் கலக்கலாக வந்திருக்கிறது ஸ்பெஷல் எடிசன் ஸ்விப்ட். புதிய ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஸ்விப்ட் காரின் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

ஸ்விப்ட் ஆல் வீல் டிரைவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 94 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

ஆக்சஸெரீஸ்

ஆக்சஸெரீஸ்

ரிமோட் கன்ட்ரோல் கீ சிஸ்டம், ஹை பை சிஸ்டமுடன் மியூசிக் பிளேயர், டில்ட் ஸ்டீயரிங் என அடுக்கிக் கொண்டே செல்லும் அளவுக்கு ஆக்சஸெரீஸ்களுடன் வந்திருக்கிறது ஸ்விப்ட் ஆல்வீல் டிரைவ் ஸ்பெஷல் எடிசன்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

டிரைவர் ஏர்பேக், இஎஸ்பி, ஏபிஎஸ், கொல்லாப்பிஸிபிள் பெடல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் என பாதுகாப்பு அம்சங்களும் நீண்ட பட்டியலாக நீள்கிறது.

விலை

விலை

ரூ.11.5 லட்சம் விலையில் புதிய ஸ்விப்ட் அவுட்டோர் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவில் ஸ்விப்ட்டுக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே, ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்விப்ட் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், விலை உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக இந்தியாவில் அறிமுகம் செய்யும் வாய்ப்பு இல்லை என மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 20, 2012, 15:40 [IST]
English summary
Japanese carmaker Suzuki Motor Corporation has has launched their latest Swift 4x4 Outdoor for global markets. Suzuki Swift 4x4 Outdoor sport hatchback is powered by 1.2 liter VVT petrol four cylinder engine which is capable of producing 94 hp transmitted to its four wheels through a six speed transmission.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+