சுஸுகியின் புதிய மைக்ரோ ஹைபிரிட் வேகன் ஆர்: படங்கள்
மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் லிட்டருக்கு 28.8 கிமீ மைலேஜ் தரும் புதிய வேகன்-ஆர் காரை சுஸுகி நிறுவனம் தனது தாயகமான ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வேகன்-ஆர் லிட்டருக்கு 28.8 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேகன் ஆரின் படங்கள் மற்றும் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
சர்வதேச மாடலாக இருப்பதால் இதே வடிவமைப்புடன் புதிய வேகன் ஆர் இந்திய மார்க்கெட்டில் வருவதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. இருநதாலும், பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனை மந்தமாகி அல்லல்பட்டு வரும் மாருதி இந்த புதிய மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் மட்டுமாவது இந்திய மாடல் வேகன் ஆரை விற்பனைக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முகப்பு தோற்றம்
முகப்பு பகுதி முழுவதும் மாறியிருக்கிறது. ஹெட்லைட், புதிய கிரில், பெரிய ஏர்டேக் என அனைத்தும் புதுமையாகி கம்பீரமாக இருக்கிறது.

பின்புற தோற்றம்
பின்புறத்தில் அதிக மாற்றங்களை காண முடியவில்லை. ஏற்கனவே விற்பனையில் இருந்ததுபோன்றே டேஞ்சர் லைட் ஆகியவை வடிவமைப்பில் மாற்றம் இல்லை

உட்புற வடிவமைப்பு
முன்வரிசை அதிக கவர்ச்சி கொண்டதாக மாறியிருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், சர்வதேச வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இன்டிரியர் டிசைன், சிடி பிளேயர் ஆகியவை உள்ளன.

ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம்
பாக்கெட்டில் சாவி இருந்தால் போதும், இந்த பட்டனை அழுத்தினால் கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும், நிறுத்தவும் கூடிய வசதி இருக்கிறது

ஸ்டீயரிங் வீல் மற்றும் வசதிகள்
3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கொண்டதாகவும், அதில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகளும் இருப்பதால் டிரைவிங்கின்போது மிக வசதியாக இருக்கும்.

மியூசிஸ் சிஸ்டம்
ஒருங்கிணைந்த வசதிகளுடன் மியூசிக் சிஸ்டம் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக பொருத்தப்பட்டிருக்கிறது. ஏசி வென்ட்டுகளுக்கு மத்தியில் மியூசிக் சிஸ்டம் குரோம் பூச்சுடன் மிளிர்கிறது.

மடக்கி விரிக்கும் வசதியுடன் பின் இருக்கை
பின் வரிசை இருக்கைகளை மடக்கி விரிக்க முடியும். கூடுதல் பொருட்களை வைப்பதற்கு இது மிகவும் உபயோகரமானதாக இருக்கும் என்பதோடு, படுக்கை போன்றும் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








