சுஸுகியின் புதிய விட்டாரா அறிமுகம்: கணக்கில் சேருமா?

மாருதி பட்டியலில் இருந்தும் விற்பனையில் சாதிக்காத மாடல் கிராண்ட் விட்டாரா பிரிமியம் எஸ்யூவி. ஜப்பானிலிருந்த நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. சுஸுகியின் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் மாடலும்கூட.
காலத்தின் கட்டாயத்தால் கூடுதல் அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது கிராண்ட் விட்டாரா. மாஸ்கோவில் நடந்து வரும் மோட்டார் ஷோவில் இந்த புதிய விட்டாரா எஸ்யூவியை சுஸுகி பார்வைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கிரில், ஹெட்லைட், டேஞ்சர் லைட் ஆகியவை மாற்றங்களை கண்டிருக்கிறது. புதிய அலாய் வீ்ல்கள் கூடுதல் கவர்ச்தி தருகிறது. இந்த காரின் குறிப்பிடத்தக்க புதிய அம்சமாக கூறப்பட வேண்டியது, எஞ்சின் மற்றும் இதர பாகங்கள் சூப்பர் பாலிபுரொப்பலீனால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக பயன்படுத்தப்படும் பாலிப்புரொப்பலீனை விட இது 10 சதவீதம் எடை குறைவாக இருக்கும். சுஸுகியின் சொந்த தொழில்நுட்பத்தில் இந்த புதிய சூப்பர் பாலிப்புரொப்பலீன் கலவை தயாரிக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல். உட்புறத்தை முன்பை விட அழகுற காட்சி தர வைக்க சுஸுகி அதிகமாக மெனக்கெட்டிருக்கிறது.
லெதர் இருக்கைகள், ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப் ஆகியவற்றில் லெதர் உறைகள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டியவை. விட்டாராவின் புதிய அம்சங்கள் நிச்சயம் நிறைவாகவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு.
புதுப்பொலிவுடன் கூடுதல் அம்சங்களுடன் வருவதோடு, விலையையும் குறைத்து விற்பனைக்கு கொண்டு வர சுஸுகி திட்டமிட்டுள்ளது விட்டாராவுக்கு ஏறுமுகத்தை கொடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








