இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிய நடிகர் விஜய்

இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியிருக்கிறார் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் விஜய். உலகின் பல கோடீஸ்வரர்கள் தங்களது அந்தஸ்தின் அடையாளமாக ரோல்ஸ்ராய்ஸ் கார்களை கருதுகின்றனர். ஏனெனில், எல்லோருக்கும் காரை புக்கிங் செய்தவுடன் ரோல்ஸ்ராய்ஸ் விற்பனை செய்வதில்லை. வாடிக்கையாளர்களின் பின்புலத்தை ஆராய்ந்து தெளிந்தபின்தான் விற்கலாமா, வேண்டாமா? என ரோல்ஸ்ராய்ஸ் முடிவு செய்கிறது.

எனவேதான், ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைவதை அனைவரும் பெருமையாகவும், கவுரமாகவும் கருதுகின்றனர். இன்னும் சில தினங்களில் துப்பாக்கி படம் ரிலீசாக இருக்கும் நிலையில், விஜய் கோஸ்ட் காரை வாங்கி ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் ஐக்கியமாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவதாக இருக்கிறது. விஜய் வாங்கியிருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் சுவாரஸ்யங்கள் நிறைந்த சிறப்பம்சங்களை ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.

விலை

விலை

நடிகர் விஜய் இறக்குமதி செய்திருக்கும் இந்த கார் வரி உட்பட ரூ.3.5 கோடி அடக்க விலை கொண்டது.

கஸ்டமைசேஷன்

கஸ்டமைசேஷன்

ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் சிறப்புத்தன்மையே அவை வாடிக்கையாளர்கள் விரும்பும் விஷயங்களுக்கு தக்கவாறு கஸ்டமைசேஷன் செய்து தரப்படுவதான். எனவேதான், ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் புக்கிங் செய்தாலும் டெலிவிரி பெறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. நடிகர் விஜய்யும் நீண்ட நாட்கள் காத்திருந்துதான் இந்த காரை வாங்கியிருக்கிறார்.

வெளிப்புற வடிவமைப்பு

வெளிப்புற வடிவமைப்பு

விஜய் வாங்கியிருக்கும் கோஸ்ட் 2240 கிலோ எடை கொண்டது. ஆடம்பரத்தை அள்ளி இறைக்கும் வெளிப்புற வடிவமைப்பு. முன்பக்க கிரில், ஹெட்லைட் என அனைத்திலும் கோஸ்ட் முழுவதும் ரோல்ஸ் ராய்ஸின் கைவண்ணம் பளிச்சிடுகிறது.

எண்ணம்போல் வண்ணம்

எண்ணம்போல் வண்ணம்

இந்த கார் 16 விதமான கலர்களில் கிடைக்கிறது. உங்களுக்கு விருப்பமான கலரை மிக்ஸிங் செய்தும் பெயின்ட்டிங் செய்து தருவார்கள். சுருக்கமாக சொன்னால், நீங்கள் நினைக்கும் கலரில் இந்த காரை பெற்றுக்கொள்ளலாம்.

ஆடம்பரமான உட்புறம்

ஆடம்பரமான உட்புறம்

காரில் ஏறி உட்கார்ந்தவுடன் ஒரு விசாலாமான அறையில் உட்கார்ந்திருப்பது போன்ற அனுபவத்தை தரும். லெதர் இருக்கைகள் கண்ணை கவர்கிறது. இந்த இருக்கைகள் அனைத்தும் கையால் தைக்கப்படுகின்றன. லெதர் இருக்கைகளை தைப்பதற்கு பணியாளர்கள் இரண்டு வாரங்கள் எடுத்துகொள்கின்றனர்.

உள்ளலங்காரம்

உள்ளலங்காரம்

ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டு ஆகியவை தேக்கு மர வேலைப்பாடுகளால் நிறைந்திருக்கிறது. இந்த தேக்கு மரங்கள் கேரளாவிலிருந்து செல்கின்றன என்பது கொசுறு செய்தி. ஒட்டுமாத்தத்தில் ஒரு நகரும் மாளிகை போன்று கலை நயம் மிக்கதாக இருக்கிறது இதன் உட்புறம். மேற்கூரையில் சன்ஃரூப் எனப்படும் திறந்து மூடும் கண்ணாடி கூரை பொருத்தப்பட்டிருக்கிறது.

நவீன தொழில்நுட்பங்களின் சங்கமம்

நவீன தொழில்நுட்பங்களின் சங்கமம்

கோஸ்ட் காரில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் உண்டு. டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ஆகியவை உண்டு. இதேபோன்று, இரவில் செல்லும்போது 300 மீட்டருக்கு முன்னால் வரும் பாதசாரிகள் மற்றும் விலங்குகள் குறித்து எச்சரிக்கை செய்யும் வசதியும் உண்டு.

அப்படியொரு பாதுகாப்பு

அப்படியொரு பாதுகாப்பு

காரின் முன்பக்கம், பக்கவாட்டு பகுதிகளில் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது.இதனால், எந்த பக்கத்திலிருந்து வாகனங்கள் மோதினாலும் பயணிகளுக்கு அதிக பாதுகாப்புக்கு உத்தரவாதம்.

வைன்ட் ஸ்கிரீனில் ஸ்பீடோ மீட்டர்

வைன்ட் ஸ்கிரீனில் ஸ்பீடோ மீட்டர்

செயற்கோள் இணைப்பு வசதியுடன் கூடிய கன்ட்ரோல் சென்டர் டிஸ்ப்ளே மூலம் ஏராளமான வசதிகளை பெறலாம். இதேபோன்று, வைன்ட் ஸ்கிரீன் கூறப்படும் முன்பக்க கண்ணாடியில் பூசப்பட்டிருக்கும் ஸ்பெஷல் கோட்டிங்கில் காரின் வேகம் உள்ளிட்ட விபரங்களை காணலாம். தலையை குனிந்து ஸ்பீடோ மீட்டரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் கவனம் பிறழாமல் சாலையை கவனித்து ஓட்ட முடியும்.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

இந்த காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 2.24 டன் எடை கொண்ட இந்த காரை வெறும் 4.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கிறது இந்த எஞ்சின். மேலும், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிமீ வேகத்தில் செல்லும். யானையை கட்டி தீணி போடுவது போன்றுதான் இந்த காரும். லிட்டருக்கு சராசரியாக 5 கிமீ செல்லும் என்கிறது ரோல்ஸ்ராய்ஸ்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 10, 2012, 15:16 [IST]
English summary
Tamil film Actor Vijay is now a proud owner of a Rolls-Royce Ghost. Shankar has spent about Rs.3.5 crores on the Ghost including customisation. The RR Ghost costs Rs.1.25 crores while its registration and import duty takes its price to Rs.3.5 crores. Vijay joins an elite list of film personalities who own a Rolls-Royce.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+