இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 'சூப்பர்' கார் கலெக்ஷன்!

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது வருமானத்தின் பெரும் பகுதியை கார்களுக்காகவே ஒதுக்கிவிடுவார் போல தெரிகிறது. மஸாராட்டி, லம்போர்கினி என தமிழ் நட்சத்திரங்களில் இல்லாத அளவுக்கு கார்களை பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கியிருக்கிறார்.

தனது வீட்டில் குட்டி சூப்பர் கார் கேரேஜை வைத்திருக்கிறார். ஓய்வுநேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு ரவுண்ட் செல்வாராம். இதுதவிர, சென்னை ரேஸ் டிராக்கில் சூப்பர் கார்களுக்காக நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்துகொள்கிறார்.

லம்போர்கினி கல்லார்டோ

லம்போர்கினி கல்லார்டோ

லம்போர்கினியின் அதிகம் விற்பனையை தொட்ட மாடல். 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் தொட்டுவிடும் ஆற்றல் வாய்ந்த கார்.

லம்போர்கினி கல்லார்டோ

லம்போர்கினி கல்லார்டோ

அதிகபட்சமாக மணிக்கு 324 கிமீ வேகம் வரை செல்லும். ரூ. ரூ.1.55 கோடி முதல் ரூ.2.20 கோடி விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹம்மர் எச்3

ஹம்மர் எச்3

கிரிக்கெட் வீரர்கள் டோணி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் மனங்கவர்ந்த ஹம்மர் எஸ்யூவியும் ஹாரிஸ் கேரேஜை அலங்கரிக்கிறது. 239 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட இந்த கார் 242 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டது.

ஹம்மர் எச் 3

ஹம்மர் எச் 3

ஒரு லிட்டர் டீசலுக்கு 3.5 கிமீ மைலேஜ்தான் தருமாம். இந்த படா சைஸ் எஸ்யூவியில் 5 பேர் மட்டுமே செல்ல முடியும். விலை ஒரு கோடிக்கு மேல். 2010ம் ஆண்டுடன் ஹம்மர் எச்3 உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

பிஎம்டபிள்யூ 650ஐ கன்வெர்ட்டிபிள்

பிஎம்டபிள்யூ 650ஐ கன்வெர்ட்டிபிள்

பிஎம்டபிள்யூவின் பிரபல 6 சீரிஸ் காரின் கன்வெர்ட்டிபிள் மாடலை ஹாரிஸ் வைத்துள்ளார். இந்த காரில் 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 407 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

பிஎம்டபிள்யூ 650ஐ கன்வெர்ட்டிபிள்

பிஎம்டபிள்யூ 650ஐ கன்வெர்ட்டிபிள்

உட்புறத்தில் சிறந்த இன்டிரியர் கொண்ட இந்த கார் மணிக்கு 250கிமீ வேகம் வரை செல்லும். ரூ.95 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மஸராட்டி கிரான் டூரிஷ்மோ

மஸராட்டி கிரான் டூரிஷ்மோ

ஃபெராரியின் அங்கமாக செயல்படும் மஸராட்டியின் பிரபல மாடல். 460 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 4.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மஸராட்டி கிரான் டூரிஷ்மோ

மஸராட்டி கிரான் டூரிஷ்மோ

இசட்எஃப் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு 301 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் வாய்ந்தது. ரூ.1.25 கோடி விலை கொண்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 6, 2012, 12:23 [IST]
English summary
Tamil music director Harris Jayaraj hot car collection.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+