எளிமையின் சிகரம்... சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் கலெக்ஷன்
ஒரு படத்தில் நடித்தால் அடுத்த பட சம்பளத்தை வைத்து ஆடி கார் வாங்க திட்டம் போட்டு திரைத்துறையில் கால் பதிக்கும் காலமிது. ஆனால், தமிழ் சினிமாத் துறையின் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டாரின் கார்களின் பட்டியலை கேட்டால் வியப்பில் ஆழ்த்துகிறது. நாளை 64வது அகவையை எட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் நிறைவை தொட்டுவிட்டார்.
இதுவரை அவர் ஆடம்பரத்தை மட்டுமல்ல ஆடம்பர கார்களின் பக்கம் கூட திரும்பவில்லை என்பது அவரது கார்களின் பட்டியலை பார்த்தாலே புரியும். திரைத் துறை தாண்டியும் சூப்பர்ஸ்டார் ரஜினியை ஆறு முதல் அறுபது வரை விரும்புவதற்கு அவரது எளிமையே காரணம். அவரது எளிமையை பரைசாற்றும் மற்றொரு சான்றாக அவரது கார்களின் பட்டியலை இங்கே வழங்குகிறோம்.

முதல் ஆஸ்தான வாகனம்
1980கள் முதல் 1990கள் வரை பிரிமியர் பத்மினிதான் ரஜினியின் ஆஸ்தான வாகனம்.

ரஜினியின் அன்பு தம்பி 'அம்பி'
90களில் இருந்து ஃபிரமியர் பத்மினிக்கு பிறகு 2000ம் ஆண்டு வரை அம்பாசடர் கார்தான் ரஜினியின் அடுத்த ஆஸ்தான வாகனமாக மாறியது.

சிவிக்கில் திடீர் விஜயம்
நீண்ட நாட்கள் அம்பாசடரை பயன்படுத்திய அவர் அடுத்து சில ஆண்டுகள் ஹோண்டா சிவிக் காரை பயன்படுத்தினார்.

இப்போ இன்னோவா
சிவிக் காருக்கு அடுத்து டொயோட்டா இன்னோவா காரைத்தான் தற்போது பயன்படுத்தி வருகிறார். கஸ்டமைசேஷன் உள்ளிட்ட எந்த சிறப்பு வசதிகளும் இந்த காரில் கிடையாது.

பிஎம்டபிள்யூவா... எனக்கா...ஹாஹாஹா..!!
ரா.ஒன் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்ததற்காக ஷாரூக்கான் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை பரிசாக வழங்கினார். ஆனால், அதை வேண்டாம் என்று அன்போடு மறுத்துவிட்டார் ரஜினி.
சூப்பர்ஸ்டார் ரஜினி இன்னோவா வீடியோ
புது மாருதி ஸ்விஃப்ட் வாங்க ஐடியா இருக்கா? கண்டிப்பா இந்த ஆல்பத்தை மிஸ் பண்ணாதீங்க!
இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை கார் விரைவில் வர இருக்கிறது. இந்த காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு களிக்கலாம்.


Click it and Unblock the Notifications








