ரூ.9.9 லட்சத்தில் குறைந்த விலை ஆரியா: டாடா அறிமுகம்

ரூ.9.9 லட்சம் விலையில் குறைந்த விலை ஆரியா வேரியண்ட்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. பியூர் எல்எக்ஸ் என்ற புதிய வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆரியாவில் வாடிக்கையாளர்களை கவரும் ஏராளமான அம்சங்களுடன் வந்துள்ளது. டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா ஸைலோ மற்றும் செவர்லே தவேரா உள்ளிட்ட எம்பிவி மாடல்களுடன் போட்டி போடும் விலையில் ஆரியா வந்துள்ளது.

இந்த புதிய ஆரியா அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வர்த்தக பிரிவு தலைவர் ரஞ்சித் யாதவ்,"வசதிகள், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்து விதத்திலும் ஆரியா வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது குறைந்த விலை வேரியண்ட் நிச்சயம் அமோக வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்," என்றார்.

ஆரியாவின் சிறப்பு

ஆரியாவின் சிறப்பு

இடவசதி மற்றும் சொகுசு அம்சங்களில் எம்பிவி கார் போன்றும், கையாளுமையில் செடான் கார் போன்றும், பவர் மற்றும் ஃபெர்ஃபார்மென்ஸில் எஸ்யூவி போன்ற அம்சங்களை ஆரியா கொண்டிருப்பது முக்கிய சிறப்பம்சம்.

டிரைவ் சிஸ்டம்

டிரைவ் சிஸ்டம்

2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் ஆரியா கிடைக்கிறது. 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. 2வது மற்றும் 3வது வரிசை இருக்கைகளை மடக்கி விரிக்கும் வசதி கொண்டது என்பதால் கூடுதலாக பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல முடியும்.

 நவீன வசதிகள்

நவீன வசதிகள்

டாடா தயாரிப்புகளில் அதிகமான நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட கார் ஆரியாதான். குரோம் பட்டைகளுடன் கூடிய முகப்பு கிரில் டூயல் பேரல் ஹெட்லைட் ஆகியவை கூடுதல் கவர்ச்சி. லெதர் அப்ஹோல்ஸ்டரி, இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஏசி வென்ட்டுகள் என அசத்தும் அம்சங்கள் ஏராளம். இந்த காரின் டர்னிங் ரேடியஸ் 5.6 மீட்டர்.

எஞ்சின்

எஞ்சின்

பாரத் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட 2.2 லிட்டர் டைகோர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 140 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், ஆரியாவில் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

7 பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்ட கிராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த ஆரியா ரூ.9.9 லட்சம் முதல் ரூ.16.55 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 19, 2012, 11:58 [IST]
English summary
Tata Motors has launched the new Tata Aria Pure LX, a new variant with a bouquet of features, at a starting price of INR 9.9 lakhs. The Tata Aria is by far one of the most complete car in its segment. It competes with the likes of the Toyota Innova, Mahindra Xylo and Chevrolet Tavera.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+