விஸ்டா பிளாட்பார்மில் புதிய மினி எஸ்யூவியை வடிவமைக்கும் டாடா

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பாளரான டாடா பயணிகள் வாகன மார்க்கெட்டில் பின் தங்கி வருகிறது.
இந்த நிலையில், தனது மார்க்கெட்டை வலுப்படுத்திக் கொள்வதற்கு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதில், புதிய மினி எஸ்யூவி மாடல் அந்த நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விஸ்டா ஹேட்ச்பேக், மான்ஸா செடான் கார்கள் வடிவமைக்கப்பட்ட டாடாவின் எக்ஸ்-1 பிளாட்பார்மில் புதிய மினி எஸ்யூவி உருவாக்கப்படுகிறது.
இதனை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் டிம் வெவர்ட்டன் உறுதிப்படுத்தியிருக்கிறார். புதிய மினி எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வடிவமைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








