புதிய பவர்ஃபுல் விஸ்டாவை களமிறக்கும் டாடா

பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார் பட்டியலில் ஹூண்டாய் ஐ20 மற்றும் ஃபியட் புன்ட்டோ 90 கார்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது டாடா இன்டிகா விஸ்டாவும் இணைய இருக்கிறது.
90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய விஸ்டா காரை விரைவில் அறிமுகப்படுத்த ஆய்த்தமாகி வருகிறது டாடா. சோதனை ஓட்டத்தின் போது புதிய விஸ்டா கார் ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களின் கண்களில் சமீபத்தில் சிக்கியுள்ளது.
மான்ஸாவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே குவாட்ராஜெட் எஞ்சின்தான் விஸ்டாவிலும் பொருத்தப்பட்டு வருகிறது. விஸ்டாவின் இசட்எக்ஸ் டாப் வேரியண்ட் புதிய எஞ்சினுடன் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
விஸ்டாவின் சஸ்பென்ஷனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், புன்ட்டோ 90 பவர்ஃபுல் மாடலைவிட குறைவான விலையில் புதிய விஸ்டாவை களமிறக்க டாட திட்டமிட்டுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








