குறைந்த விலை ஆரியா வேரியண்ட்: டாடா அறிமுகம்

Aria
ரூ.9.95 லட்சம் விலையில் புதிய பேஸ் வேரியண்ட் ஆரியா எம்பிவி காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

பிரிமியம் ரகத்தில் நிலை நிறுத்தப்பட்ட ஆரியா எம்பிவி கார் விற்பனையில் சோபிக்கவில்லை. ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் வந்த ஆரியாவின் விலையை கேட்ட வாடிக்கையாளர்கள் அந்த பக்கம் முகத்தை திருப்பவில்லை.

இந்த நிலையில், ஆரியாவில் பல வசதிகளை பிடுங்கிவிட்டு தற்போது விலையை குறைத்து புதிய பேஸ் வேரியண்ட்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. பியூர் எல்எக்ஸ் என்ற புதிய வேரியண்ட்டில் 2 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வந்திருக்கும் புதிய ஆரியா சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சஃபாரி ஸ்ட்ராம் விலையிலேயே ரூ.9.95 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய ஆரியா 2 வீல் டிரைவ் பேஸ் வேரியண்ட்டில் பாடி கலர் பம்பர், புரொஜெக்டர் எச்ஐடி ஹெட்லைட், டிஸ்க் பிரேக், கீ லெஸ் என்ட்ரி, ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வினைல் சீட் கவர் என புதிய ஆரியாவிலும் கூடுதல் அம்சங்களுக்கு பஞ்சமில்லை. ஆரியாவில் 2.2 லிட்டர் டிகோர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 20, 2012, 16:17 [IST]
English summary
Tata has launched the stripped down variant of Aria available at a price of Rs. 9.95 lakh (ex-showroom New Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+