90 பிஎச்பி ஆற்றலுடன் மல்லுக்கட்ட வந்த புதிய டாடா விஸ்ட்டா
புதிய பவர்ஃபுல் விஸ்டா காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. பழைய விஸ்ட்டாவிற்கு உயிர் கொடுத்து வரும் அதே 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் புதிய விஸ்ட்டாவிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், விஜிடி டர்போசார்ஜர் பொருத்தப்பட்டிருப்பதால் புதிய விஸ்ட்டாவின் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

பவர்ஃபுல் ஹேட்ச்பேக் வரிசையில் விஸ்ட்டாவுக்கு இடம்
புன்ட்டோ, ஐ20 ஆகிய பவர்ஃபுல் ஹேட்ச்பேக் வரிசையில் டாடா விஸ்டாவும் இணைந்திருக்கிறது.

டாடா விஸ்டா படங்கள்
விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய 2 வேரியண்களில் வந்துள்ளது.

ஸ்டான்டர்டு பாதுகாப்பு அம்சங்கள்
விஎக்ஸ் வேரியண்ட்டில் இபிடி+ஏபிஎஸ் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாகவும், இசட்எக்ஸ் வேரியண்ட்டில் இபிடி+ஏபிஸ்+ ஏர்பேக்குகள் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீசாகவும் இருக்கும்.

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
புதிய விஸ்டாவில் மான்ஸாவின் இன்ஸ்ட்ரூமென்ட் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் தகவல்.

விலை
விஎக்ஸ் வேரியண்ட் ரூ.6.03 லட்சத்திலும், இசட்எக்ஸ் வேரியண்ட் ரூ.6.63 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








