கூடுதல் அம்சங்களுடன் கிளப் கிளாஸ் டாடா மான்ஸா அறிமுகம்
போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் விதத்திலும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் விதத்திலும் புதிய கிளப் கிளாஸ் மான்ஸா செடான் காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இத்தாலியன் லெதர் அப்ஹோல்ஸ்டரியுடன் வந்திருக்கும் புதிய மான்ஸா பண்டிகை கால ஹிட் லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடிக்கும் என ஆணித் தரமாக கூறலாம். கிளப் கிளாஸ் மான்ஸாவின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மைலேஜ் மற்றும் விலை விபரம்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 21.02 கிமீ மைலேஜும் தருவதாக அராய் சான்று குறிப்பிடுகிறது.
பெட்ரோல்: ரூ.5.70 லட்சம்
டீசல்: ரூ.6.49 லட்சம்

இன்டிரியர்
பிளாக் அன்ட் பிளம் கலர் இன்டிரியர் அசத்தலாக இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஜிபிஎஸ் வசதியுடன் டச் ஸ்கிரீன் மல்டிமீடியா இன்டர்பேஸ் கொண்டிருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
ஸ்போர்ட்டி லுக்குடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மாற்றம் கண்டிருக்கிறது.

கூடுதல் வசதி
கியர் லிவருக்கு முன்னால் பாட்டில்கள் உள்ளிட்ட இதர பொருட்களை வைப்பதற்கான இடவசதி இருக்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
டூவல் ஏர்பேக்குகள், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், கொல்லாப்சிபிள் ஸ்டீயரிங், எஞ்சின் இம்மொபைலைசர், சென்ட்ரல் லாக்கிங் என ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உண்டு.

வண்ணங்கள்
இன்பினிட்டி பிளாக், தைரியன் ஒயின், லேசர் ரெட், கேஸில் கிரே, வெள்ளை மற்றும் ஜெட் சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

கிளப் கிளாஸ்
கிளப் கிளாஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்களை கனிவுடன் கவனிக்க டாடா ஷோரூம்களில் சிறப்பு பிரதிநிதிகள் உள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் செய்வது போன்றவற்றில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளது.

அப்ஹோல்ஸ்டரி
இத்தாலியன் லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் தாராள இடவசதி மான்ஸாவிற்கு கூடுதல் மதிப்பு தருகிறது.


Click it and Unblock the Notifications








