இந்த மாத இறுதியில் அறிமுகமாகிறது டாடாவின் புதிய சஃபாரி

Tata Safari
இந்த மாத இறுதியில் புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை களமிறக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.

அம்பாசடருக்கு பிறகு அரசியல்வாதிகளின் விருப்பமான காராக டாடா சஃபாரி விளங்கி வந்தது. ஆனால், மார்க்கெட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களால் சஃபாரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பிற நிறுவனங்களின் எஸ்யூவி மாடல்களுடன் எளிதாக போட்டி போடும் வகையில், சஃபாரியை புதுப்பொலிவுடன் மாற்றியுள்ளது டாடா மோட்டார்ஸ். எல் வடிவ ஸினான் ஹெட்லைட்டுகள், வட்ட வடிவ பனி விளக்குகள், பாடி கலர் பம்பர், ஆட்டோமேட்டிக் ரியர் வியூ மிரர் என புதிய முன்பக்க கிரில் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது.

தாராள இடவசதிக்கு பெயர் பெற்ற டாடா சஃபாரியின் உட்புறமும் முன்பைவிட அதிக கவர்ச்சி கொண்டதாக மாறியுள்ளது. 3வது வரிசை இருக்கை மடக்கி விரிக்கும் வசதிகொண்டதாக இருக்கும். பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோ, கிளைமேட் கன்ட்ரோல், ரியர் டிபாகர் என எண்ணற்ற புதுமைகள் விரவிக் கிடக்கிறது புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில்.

ஏபிஎஸ், இபிடி, ட்ராக்ஷன் கன்ட்ரோல் என முழுக்க முழுக்க பிரிமியம் அந்தஸ்து அம்சங்களை கொண்டு வருகிறது புதிய சஃபாரி. மஹிந்திராவின் புதிய எஸ்யூவிக்கு நேரடி போட்டி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அதிக அம்சங்களை தாங்கி வரும் புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.

புதிய சஃபாரியில் பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் டீசல் டிகோர் எஞ்சினிலிருந்து ஆற்றல் பீறிட்டு எழும் வகையில் ட்யூனிங் செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Article Published On: Tuesday, May 15, 2012, 11:40 [IST]
English summary
Tata Motors planning to launch All New Tata Safari Strome in Indian Market soon. The Safari Storme is powered by a 2.2 L 16-valve common rail (DiCOR) engine (140 PS power; 320 Nm torque) with a variable geometry turbo, mated with a 5-speed manual transmission.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+