டாடா கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை சலுகைகள்: முழு விபரம்

பண்டிகை காலத்தையொட்டி அனைத்து கார் மாடல்களுக்கும் ரூ.25,000 முதல் ரூ.1.30 லட்சம் வரை அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். ஆக்சஸெரீஸ், வாரண்டி உள்பட பல சலுகைகளை அறிவித்துள்ளது. வரும் 17ந் தேதி வரை இந்த புதிய சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும் என்பதை ஸ்லைடரில் பார்க்கலாம்.

டாடா நானோ

டாடா நானோ

நானோ காருக்கு ரூ.25,000 முதல் ரூ.40,000 மதிப்புடைய சலுகைகளை வழங்குவதாக டாடா தெரிவித்துள்ளது

டாடா இன்டிகா விஸ்டா

டாடா இன்டிகா விஸ்டா

இன்டிகா விஸ்டா பெட்ரோல் காருக்கு ரூ.1 லட்சம் வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.55,000 வரையிலும் சலுகைகள் கிடைக்கும்.

 டாடா இன்டிகா மான்ஸா

டாடா இன்டிகா மான்ஸா

இன்டிகா மான்ஸாவின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.1.3 லட்சம் வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.70,000 வரையிலும் சலுகைகள் வழங்குவதாக டாடா தெரிவித்துள்ளது.

டாடா சுமோ கோல்டு

டாடா சுமோ கோல்டு

சுமோ கோல்டு காருக்கு குறைந்த முன்பணமாக ரூ.45,000 மட்டுமே செலுத்தி கடன் திட்டத்தில் வாங்கும் சலுகையையும், இதுதவிர ரூ.70,000 மதிப்புடைய இதர சலுகைகளையும் வழங்குவதாக டாடா அறிவித்துள்ளது.

டாடா சஃபாரி டிகோர்

டாடா சஃபாரி டிகோர்

சஃபாரி டிகோர் எஸ்யூவிக்கு குறைந்த முன்பணம் ரூ.99,000 மட்டுமே செலுத்தி கடன் திட்டத்தில் வாங்கும் சலுகை மற்றும் ரூ.80,000 மதிப்புக்கு சலுகைகளும் கிடைக்கும்.

டாடா வென்ச்சர்

டாடா வென்ச்சர்

ரூ.45,000 முன்பணம் கட்டினால் கடன் திட்டத்தில் வென்ச்சரை வாங்கும் திட்டத்தையும், ரூ.50,000 மதிப்புக்கு இதர சலுகைகளையும் வென்ச்சருக்கு டாடா வழங்குகிறது.

டாடா ஆரியா

டாடா ஆரியா

பண்டிகை காலத்தையொட்டி ரூ.9.95 லட்சம் ஆரம்ப விலையில் ஆரியாவை விற்பனைக்கு கிடைக்கும் என டாடா தெரிவித்துள்ளது. மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள டீலரை அணுகுமாறு டாடா கேட்டுக்கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 9, 2012, 11:00 [IST]
English summary
Tata Motors has announced an irresistible package of benefits this festive season, on accessories, extended warranty and on a host of other value added services, ranging from Rs 25,000 to Rs 1,30,000. These offers are applicable on Tata Motors entire range of passenger cars and utility vehicles, till November 17.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+