புதிய பெட்ரோல், டீசல் எஞ்சினுடன் வரும் டாடா நானோ: தகவல்கள்

நானோ காரில் தற்போது 38 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 800 சிசி திறன் கொண்ட புதிய பெட்ரோல் எஞ்சினை நானோவில் பொருத்தும் முயற்சிகளை டாடா மேற்கொண்டுள்ளது.
புதிய பெட்ரோல் எஞ்சினை பொருத்துவதன் மூலம் நானோ கார் ஆல்ட்டோ, இயான் உள்ளிட்ட கார்களுக்கு இணையான சக்தி கொண்ட காராக மாறும். கூடுதல் ஆற்றல் கொண்ட எஞ்சின் பொருத்தப்படுவதால் நானோவின் விலையை உயர்த்தவும் டாடா முடிவு செய்துள்ளது.
இதுதவிர, டீசல் மாடல் நானோவையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. டீசல் நானோவில் 700 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டீசல் நானோ லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீசல் நானோ வரும் பிப்ரவரியிலும், சிஎன்ஜி மற்றும் புதிய பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட நானோ கார்கள் அடுத்த ஆண்டு இறுதியில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








